×
 

கணவரை ஷாக் வைத்து கொன்ற மனைவி.. சேர்ந்து வாழ அழைத்ததால் விபரீதம்..!

ஹைதரபாத் அருகே சடலத்தை ஆட்டோவில் ஏற்றி யாருக்கும் தெரியாமல் பெண் ஒருவர் புதைக்க முயற்சி செய்ததாக ஆட்டோ டிரைவர் அளித்த தகவலில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. என்ன அது? விரிவாக பார்ப்போம்..

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பாப்பண்ணபேட்டை மண்டலத்தில் உள்ள பாத்தலிங்கயப்பள்ளியைச் சேர்ந்தவர் பெய்னி சைலு (வயது 45) இவரது மனைவி கவிதா (வயது 42) இவர்கள் இருவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்வேதா (வயது 17) என்ற மகளும், பன்னி (வயது 14) என்ற மகனும் உள்ளனர். தம்பதியினருக்கு ஆரம்பத்திலிருந்தே ஒத்துப்போகாததால், சைலு தனது குழந்தைகளுடன் பாத்தலிங்கயப்பள்ளியில் வசித்து வந்தார்.

கிராமத்தில் இருப்பது பிடிக்காத கவிதா, ஐதராபாத்திற்கு வந்து  தனது தங்கை ஜோதி மற்றும் மூத்த சகோதரி மல்லேஷ் ஆகியோருடன் மித்ரா ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். கவிதாவிற்கு  தோன்றும் போதெல்லாம் ஊருக்குச் சென்று கணவனுடனும் குழந்தைகளுடனும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் ஐதராபாத் வருவார். 

இந்த நிலையில் சமீபத்தில், நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டபோது, ​​மனைவியை ஒன்றாக இருக்க கிராமத்திற்கே வரும் படி அழைத்துள்ளார் ஷைனி. அதன்படி இருவரும் ஒன்றாக இருக்க முடிவு செய்தனர். 12 ஆம் தேதி சைலு தனது மனைவி கவிதாவுடன் ஐதராபாத் மித்ரா ஹில்ஸ்க்கு வந்தார். 18 ஆம் தேதி இரவு, சைலு, கவிதா, ஜோதி, மல்லேஷ் ஆகியோர் ஒன்றாக கள் குடித்தனர்.

அந்த நேரத்தில், சாய்க்கும் கவிதாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்தக் கோபத்தில் கவிதா, தனது தங்கையின் உதவியுடன், தனது கணவரை மின்சார ஷாக்  கொடுத்து கொல்ல முயன்றார். இருப்பினும் அவர் இறக்காததால்  அவர்கள் இருவரும் அவரது கழுத்தில் ஒரு துண்டைச் சுற்றி இறுக்கி கொலை செய்தனர். 

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை கல்லால் தாக்கிய கொடூரம்.. கோமா நிலைக்கு சென்ற இளம்பெண்.. ஹைதரபாத்தில் கணவன் கைது..!


அதே நாளில் நள்ளிரவு 12 மணியளவில், கவிதா தனக்குத் தெரிந்த ஒரு ஆட்டோ டிரைவரை அழைத்து, உடலை எடுத்துச் சென்று, பழைய லிங்கயப்பள்ளி கிராமத்தின் புறநகரில் அடக்கம் செய்ய முயன்றார். ஆனால் யாருக்கும் தெரியாமல் ஏன் உடலை அடக்கம் செய்கிறீர்கள்? நான் இதற்கு ஒத்துழைக்க மாட்டேன் என்று ஆட்டோ ஓட்டுநர் கூற, அவள் தன் வீட்டில் இறக்கிவிடச் சொன்னாள்.

இதனால் திரும்பி வந்த பிறகு, தனது சகோதரி மற்றும் சகோதரரின் உதவியுடன், மித்ரா ஹில்ஸுக்கு அடுத்த ஒரு வெறிச்சோடிய இடத்தில்  கணவரின் உடலை அடக்கம் செய்தார். பின்னர், பாதலிங்கயப்பள்ளிக்கு சென்றனர். அங்கு அவரது பிள்ளைகள் மற்றும் சைலு குடும்பத்தினர் சைலு குறித்து கேட்டதற்கு கவிதா முரண்பாடான பதில்களைக் கொடுத்துள்ளார். 

மறுபுறம் சாயின் உடலை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர் கே.பி.எச்.பி. காவல் நிலையத்திற்குச் சென்று கவிதாவைப் பற்றி புகார் அளித்தார். திங்கட்கிழமை ஜோதி மற்றும் மல்லேஷை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது இந்த உண்மை வெளிவந்ததுள்ளது. போலீசார் உடனடியாக பாத்தலிங்கயப்பள்ளிக்குச் சென்று, கவிதாவை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது தனது கணவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும் சந்தேகப்பட்டு தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாலும், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்தக் கொலையைச் செய்ததாக கூறி உள்ளார். ஆனால் சைலு குடும்பத்தினர்  அவருக்கு எந்த நோயும் இல்லை என்று கூறினர். இதற்கிடையில், சைலு உடல் தோண்டி எடுக்கப்பட்டு, குகட்பள்ளி தாசில்தார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது, கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: அய்யோ என் புருஷனை பாம்பு கடிச்சிருச்சே! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி.. காதலன் கொடுத்த ஐடியா புஷ்ஷ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share