நாடு முழுவதும் உள்ள ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளங்லை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு விண்ணப்ப பதிவானது ஜனவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை பெறப்பட்டது.

இந்த தேர்வுக்கு முதுநிலை படிப்புகளில் 157 பாடங்களுக்கு 4 லட்சத்து 12 ஆயிரத்து 24 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: கெத்து காட்டிடீங்க! விருதுகளை வாரிக் குவித்த தமிழ்நாடு போக்குவரத்து கழகம்
மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை 43 சிப்ட்களில் கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது. ஒரு பாடத்திற்கும் 90 மணி நேரம் தேர்வு நடைபெறும். தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அமையும். மேலும், மொழி பாடங்கள் அந்தந்த மொழிகளில் நடைபெறும்.

இந்நிலையில் மார்ச் 13 முதல் மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மார்ச் 20ம் தேதிக்கு பின்னர் நடைபெறும் தேர்வுகளுக்கு பின்னர் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் தகவலுக்கு 011-40759000 அல்லது 011 – 69227700 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் செய்வது கொஞ்சமும் சரியல்ல.. கடுகடுத்த மத்திய அமைச்சர் ஜோஷி..!