ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து மாநில சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு பேருந்துகளை சிறப்பாக இயற்றிய மாநிலங்களுக்கு தேசிய பொது போக்குவரத்து விருதுகள் வழங்கப்பட்டது.

2023 - -24ம் ஆண்டுக்கான விருதுகளில், 19 விருதுகள் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டன.
இந்த விருதுகளை, முன்னாள் ஆளுநர் கிரண்பேடியிடம் இருந்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக தலைமை அதிகாரிகள் மோகன், நடராஜன் உள்ளிட்டோர் பெற்றனர்.
இதையும் படிங்க: உலகின் அழகான 'வங்கி நோட்டு' எது? முதல் பரிசை தட்டிச் சென்ற ஐக்கிய அரபு அமீரகம்..!

அகில இந்திய அளவில் சிறந்த சாலை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியதில் சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் முதலிடம் பிடித்தது.
அதேபோல், அகில இந்திய அளவில் நிதி நடைமுறைகளை சிறப்பாக பின்பற்றியதில் சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

மாநில விரைவு போக்குவரத்து கழகத்திற்கு பணியாளர் உற்பத்தித்திறன் விருதும், மாநில விரைவு போக்குவரத்து கழகத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை விருதும் கிடைத்துள்ளது.
கிராமப்புறங்களில் வாகன பயன்பாட்டை பொறுத்தவரை மாநில விரைவு போக்குவரத்து கழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. கிராமப்புற அளவில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தியதாக விழுப்புரத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

மேலும் முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 12 பிரிவுகளும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 7 பிரிவுகளும் சேர்த்து மொத்தம் 19 பிரிவுகளில் தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் தேர்வாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி... விருதை தட்டிதூக்கிய பூர்ணிமா தேவி பர்மன்..!