ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்ட ஒருவர் அதற்குள் உறைந்த நிலையில் விஷ பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த அவருடைய பேஸ்புக் பதிவு ஆயிரக்கணக்கான லைக், கமெண்ட்களை வசீகரித்து உள்ளது.
சிலர் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தங்கள் ஆழ்ந்த கவலைகளை எழுப்பியிருந்தனர். ஆனால் மற்றும் சிலர் இது பற்றி நகைச்சுவையாகவும் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். ஐஸ்கிரீம் ஒரு பாதுகாப்பான உணவு. தாய்லாந்தில் ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கி பிறகு வேதனையான அதிர்ச்சியூட்டும் அனுபவத்தை உணர்ந்தார்.

தெரு வண்டி வியாபாரி ஒருவரிடம் இருந்து இந்த ஐஸ்கிரீமை அவர் வாங்கி இருக்கிறார். அவர் வாங்கிய ஐஸ்கிரீமுக்குள் உறைந்த நிலையில் விஷ பாம்பு என்று இருந்ததை பார்த்து அதிர்ந்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் நண்பிக்கு வெறும் 5 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ரகசியங்கள்..! 2 பேரை தூக்கிய NIA..!
மத்திய தாய்லாந்தின் முவாங் பகுதியில் உள்ள ராப்தோ என்ற இடத்தைச் சேர்ந்த ரேபன் நக் லெங் பூன் என்பது அவருடைய பெயர். தனது முகநூல் பதிவில் பாபின் சுரண்ட உடல் தெளிவாக தெரியும் படங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
இவ்வளவு பெரிய கண்கள்..
அது இறந்து விட்டதா.. கருப்பு பீன்ஸ்.. இது உண்மையான படம் ஏனென்றால் நானே அதை வாங்கினேன் என்று அந்த நபர் தாய்லாந்து மொழியில் பதிவு செய்திருக்கிறார். கருப்பு பீன்ஸ் என்பது தாய்லாந்தில் காணப்படும் ஒரு வகை ஐஸ்கிரீம்.
கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வெளியிடப்பட்ட படத்தில் பாம்பின் தலை தெளிவாக தெரிகிறது. இது லேசான விஷம் கொண்ட தங்கமரப் பாம்பாக இருக்கலாம் என்று சிலர் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.
இது எப்படி ஐஸ்கிரீம்க்குள் புதைந்து உறைந்தது என்பது தான் புதிராக உள்ளது. "ஒரு பேஸ்புக் பையனாலே இது ஒரு புதிய சுவையாக இருக்கலாம். சிற்றுண்டி சுவையுடன் கூடிய ஐஸ்கிரீம்" என்றும், மற்றொரு நபர் "சாப்பிட்டு தேவதையாக மாறு" என்று தங்களுடைய கைவண்ணங்களையும் கவிதை ஆக்க வல்லமையையும் அதில் காட்டி இருந்தனர்.

"இது ஒரு தங்க மர பாம்பா அல்லது குட்டி ராஜ நாக பாம்பா ..என்று நான் யோசித்துக் கொண்டு இருந்தேன்" என்பதாக ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். பெரும்பாலானோர் இது ஒரு தங்க மரப்பாம்பு அல்லது 'கிரிசோபிலியா ஆர் நாட்டா' என்று நம்புகிறார்கள்.
தாய்லாந்து இலங்கை கம்போடியா சீனா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் தங்கமரப் பாம்புகள் காணப்படுகின்றன. லேசான விஷத் தன்மை கொண்டதாக இருந்தாலும் அவற்றின் விஷம் மனிதர்களுக்கு ஆபத்தான நிலையாக கருதப் படவில்லை. இந்த பாம்புகள் 11.5 முதல் 13 சென்டிமீட்டர் வரை நீளம் உள்ளது. முதிர்ச்சி அடையும் போது அவை ஒரு மீட்டர் நீளத்தை எட்டும்.
ஒரு நகைச்சுவை தலைப்பில் "உன் கண்கள் ரொம்ப அழகா இருக்கு; நீ எப்படி இப்படி சாக முடியும் என்று எழுதி இருக்கிறார். மற்றொருவர் கூடுதல் புரதத்துடன் கூடிய புதிய சுவை என்றும் பதிவு செய்திருந்தார் இன்னும் ஒருவர் "ஐஸ்கிரீம் வாங்கினேன்; இலவச பரிசு ஒன்று கிடைத்தது" என்கிறார். எல்லாவற்றிலும் உச்சமாக பாம்பை நன்றாக பார்க்க விரும்புவதால் ஐஸ்கிரீமை கொஞ்சம் விரைவாக சாப்பிடுங்க" என்று அந்த நபரிடம் கேட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: தாமதத்துக்கு காரணம் என்ன..? போலீஸ் கான்ஸ்டபிளுக்கு இப்படி ஒரு கனவா..! பதிலை கேட்டு வாய் பிளந்த உயரதிகாரி..!