டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் பட்டாசு தயாரிப்பிற்கும் விற்பனைக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேபோல் பட்டாசுகள் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக காற்று தரக் குறியீடு 0- 50க்கு இடைப்பட்ட அளவு இருப்பது சுகாதாரமான சூழலுக்கான அறிகுறி. 51 இல் இருந்து 100க்கு இடைப்பட்ட அளவு திருப்திகரமானது. அதில் 101 இருந்து 200 அளவானது மிதமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதிலும் 201 இருந்து 300க்கும் இடையே இருந்தால் மோசமான காற்று தர குறியீடு என்று அறியப்படுகிறது. 301- 400 மிகவும் மோசமான காற்று மாசு குறியீடு.

தலைநகர் டெல்லியை பொருத்தவரை 428க்கும் அதிகமான அளவை காற்று தரக்குறியீடு எட்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது டெல்லியில் உள்ள காற்று மாசு அளவை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கடுமையான காற்று மாசுவால் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு..? அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் என்ன நடக்கிறது.?

இதன் காரணமாக டெல்லியில் காற்று மாசுவை குறைக்க அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுமான பணிகள் உள்ளிட்டவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் டில்லியில் பட்டாசு விற்பனை செய்வதற்கும், தயாரிப்பதற்கும், வெடிப்பதற்கும் தடை நீடிக்கிறது. இந்த நிலையில் பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தடையை தளர்த்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனத தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தற்போது டெல்லியில் பெரும்பாலான மக்கள் திருக்களில் வேலை செய்து வருவதால் அவர்கள் அதிக அளவில் காற்று மாசால் பாதிக்கப்படுவதாகவும் அனைவராலும் வீடுகளில் காற்று சுத்திகரிப்பானை வாங்கி வைக்க இயலாது என்றும் கருத்து தெரிவித்தனர். கடந்த ஆறு மாதங்களாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமாகவே இருந்து வருகிறது என்று கூறிய நீதிபதிகள், நல்வாழ்வு என்பது அனைவரின் உரிமை என்கிறது அரசியலமைப்பு., எனவே மாசில்லாத சூழலில் வாழும் உரிமையும் இதில் அடங்குவதாக தெரிவித்தனர்.

பசுமை பட்டாசுகளால் குறைந்த அளவே காற்று மாசு ஏற்படுவதாகவும் நீதிமன்றம் திருப்தி அடையும் வரை பட்டாசு கால தடையை தளர்ந்தும் பேச்சுக்கு இடமில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இரண்டாவது இடத்துக்குதான் இப்போ போட்டி.. முதல்வர் மு.க. ஸ்டாலின் சரவெடி..!!