தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டமானது இன்றைய தினம் சென்னையில் இந்த ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.

கேரளா முதல்வர் பினராய் விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
கர்நாடகாவிலிருந்து துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.எஸ்.பொன்னண்ணா ஆகியோரும், ஆந்தராவிலிருந்துருந்து ஒய்ஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மிதுன் ரெட்டி, ஜனசேனா கட்சியின் உதய் சீரீனிவாஸ் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தெலங்கானாவிலிருந்து காங்கிரஸ் கட்சியின் மகேஷ் குண்ட், பாரதிய ராஷ்ட்ரிய சமிதியின் கே டி.டி ராமராவ், பி வினோத்குமார், ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த ஈத்தியாஸ் ஜலீல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஒடிசாவிலிருந்து பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய குமார் தாஸ், அமர் பட்நாயக், காங்கிரஸ் கட்சியின் பக்த சரண்தாஸ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலத்தில் இருந்து முதலமைச்சர் பகவந்த்மான், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் சிரோமணி, அகாளிதளம் கட்சியின் தல்ஜித் சிங் சீமா மற்றும் பல்வீந்தர் சிங் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர் .

கூட்டத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வரவேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தலைவர்களையும் பொன்னாடை போர்த்தியும், மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றத்தோடு, அனைவருக்கும் தமிழகத்தின் பராம்பரிய பெருமையை பறைசாற்றக்கூடிய பரிசு பெட்டியையும் வழங்கினர்.

இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சரை நேரில் சந்தித்த திமுக தூதுக்குழு.. தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்கள் என்னென்ன மாதிரியான பிரச்சனைகள சந்திக்கக்கூடும் என்பது குறித்து பவர் பாயிண்ட் மூலமாக விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா நியாயமான எல்லை நிர்ணயத்தைக் கோருகிறது. இந்த பவர் பாயிண்டில் ஐந்து முக்கிய பகுதிகள் உள்ளன. மக்கள்தொகை வளர்ச்சியின் போக்கு, எல்லை நிர்ணய பயிற்சிகளின் வரலாறு, சாத்தியமான எல்லை நிர்ணயம், எங்களைப் போன்ற மாநிலங்களில் தாக்கம், நாம் ஏன் கைகோர்க்க வேண்டும்?. இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. நாங்கள் அறிமுகப்படுத்திய கொள்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

சில மாநிலங்கள் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை அனுபவித்தபோது, நிலையான மக்கள்தொகை வளர்ச்சிக்கான இலக்கை அடைந்தோம். இதன் விளைவாக, பல மாநிலங்களை விட மிக முன்னதாகவே மக்கள்தொகை மாற்று விகிதத்தை அடைந்தோம். ஆனால் இந்த சாதனைக்கு வெகுமதி பெறுவதற்குப் பதிலாக, இப்போது நமது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளோம். இந்த வரைபடத்தில் உள்ள பச்சைக் கோடு, இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை எவ்வளவு திறம்பட கட்டுப்படுத்தியுள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகிறது. மாறாக, நீங்கள் ஊதா நிறக் கோட்டைப் பார்க்கலாம். அது பிற மாநிலங்களின் நிலையைக் காட்டுகிறது என பவர் பாயிண்ட் மூலமாக விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்கும்.. 9 மாநிலங்களுக்கு பாதிப்பு.. காங்கிரஸ் அடுக்கிய புள்ளிவிவரம்..!