அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன் 2016ம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வனத்துறை அமைச்சராக இருந்தவர்.

தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணி அறிவிப்பு வெளியானதை அடுத்து தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான அதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: அதிமுக-பாமக- பாஜக என நாங்க எல்லாரும் கூட்டணிங்க..! தீர்க்கமாகச் சொல்லும் திண்டுக்கல் சீனிவாசன்..!

அதன்படி திண்டுக்கல்லில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். இதனை அடுத்து இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னைக்கு வந்திருந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செரிமானக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி.. அதிருப்தியில் விலகிய அதிமுக நிர்வாகி..!