அமமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் தலைமை நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இஃப்தார் நோன்பை தொடங்கி வைத்து பேசினார். "தேர்தலின் போது இஸ்லாமியர்களை திமுக அரவணைக்கும். தேர்தல் முடிந்த பிறகு அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கும். இது திமுகவின் குணம்.

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை போன்ற நிகழ்வுகளால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இவற்றை மறைக்கவே மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு எனத் தேவையற்ற பிரச்சினைகளை திமுக ஊதி பெரிதாக்கி வருகிறது. திமுக ஆட்சிக்கு வரும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் நல்ல முடிவுரை எழுதுவார்கள். அதே நேரத்தில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிற எல்லாக் கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலுக்கு முன்பாகவே உறுதியாக இடம் பெற வேண்டும்
இதையும் படிங்க: இவுங்களுக்கு மனசுல ஜெயலலிதான்னு நினைப்பு.. அதிமுகவை டேமேஜ் ஆக்கிய டிடிவி தினகரன்..!

இதனால் அக்கூகூட்டணி வலுப்பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் நிறுவப்படும்." என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுகையில், “ புனித ரமலான் மாதத்தில் ஆண்டவரிடம் நாம் எதை வேண்டுகிறோமோ, அது நிச்சயமாக நடக்கும். அந்த வகையில் தமிழகத்தில் மீண்டும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும். பிரிந்து கிடக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். இதுவே இந்த ரமலான் மாதத்தில் என்னுடைய வேண்டுதலாகும்.” என்று தெரிவித்தார்.
.
இதையும் படிங்க: அமமுகவை பாஜகவுடன் இணைக்க அழுத்தம்... டி.டி.வி.தினகரனின் கெத்தான முடிவு..!