பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றன. தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்பார்த்தன. ஆனால், அரசு சாதகமான அறிவிப்புகள் வெளியாகததால், அரசு ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று (மார்ச் 22) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய இப்போராட்டம் சென்னையில் சேப்பாக்கம் எழிலகம், கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ராமநாதபுரம், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர், தமிழர்கள் அல்ல’.. சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்..!
இந்நிலையில் சென்னையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு முதல்வர் இந்தியாவில் இருக்கிறார் என்றால், அது முதல்வர் மு.க. ஸ்டாலின்தான். எங்களைச் சந்தித்து பேசகூட அவருக்கு மனமில்லை. இந்தக் கோரிக்கைகளைக் கண்டிப்பாக நாங்கள் வென்றெடுப்போம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திமுக அரசு மீது மிகவும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அரசு எங்களை ஏமாற்ற நினைத்தால் 2026 தேர்தலில் நீங்கள் ஏமாறுவீர்கள். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்.. கோடு போட்ட ஸ்டாலின்.. ரோடு போடும் ரேவந்த் ரெட்டி..!!