ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 439வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அதனை அடுத்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்றுள்ளார் 6510 வாக்குகள் பெற்று நோட்டா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஈரோடு கிழக்குத் தேர்தல் வெற்றியை முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்பதாக கட்சியின் சார்பில் போட்டியிட்ட விசி சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு அவதூறு கருத்துக்களை பரப்பினாலும் இறுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது மேலும் மக்களின் மனங்களை வென்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். திமுகவிற்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சந்திரகுமார் பேட்டியின் போது கூறினார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு.. வெற்றி யாருக்கு..?
தேர்தல் பிரச்சாரத்தின் போது வீதி வீதியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்துள்ளோம் அந்த குறைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறினார். 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது எனவே திமுக ஒரு அசைக்க முடியாத சக்தி என்பது மீண்டும் நிரூபிக்க பட்டுள்ளதாக சந்திரகுமார் கூறினார்.

தேர்தலுக்கு முன் என்னை அழைத்துப் பேசிய திமுக தலைவர் நேரடியாக நீங்களே மக்களை சந்தித்து வெற்றி பெற்று வாருங்கள் என கட்டளையிட்டார். அதன்படி நாங்கள் பெரிய அளவில் தலைவர்களை தொகுதிக்கு வரவழைக்காமல் நாங்களே மக்களை சந்தித்து வெற்றியும் பெற்றிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்..