இன்று தமிழகம் வருகைதந்த துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் அமித் ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது சர்ச்சையானது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''அது வழக்கம் போல் திமுகவினர் ஓட்டுவதுதான். இன்றைக்கு யார் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டதோ, அவரை அங்கிருந்து இன்றைக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார். அப்போது அந்த சகோதரி எனக்கும், இந்த போஸ்டருக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்துள்ளார். 
பாஜகவினரின் போஸ்டரை பொறுத்தவரை ஒரு புரோட்டாகால் இருக்கும். தேசிய தலைவருடைய புகைப்படம் இருக்கும், மாநில தலைவருடைய புகைப்படம் இருக்கும். பாரத பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் இருக்கும். அதன்பிறகு தான் வேறு எந்த தலைவருடைய புகைப்படமாக இருந்தாலும் இடம்பெறும்.
இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ-வை விடுதலை செய்தது செல்லாது... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!
இந்த புரோட்டாகாலைத்தான் பாரதிய ஜனதா கட்சி போஸ்டரை பின் தொடர்கிறது. அப்படித்தான் அமித்ஷா போஸ்டரும் இந்த இடத்தில் இருக்கும். ஆனால் வெறும் அமித் ஷாவை மட்டும் வைத்து நாங்கள் கேவலப்படுத்துகிறோம் என்று திமுகவின் அல்லு சில்லு பையலுக, யாரோ ஒருத்தருடைய முகத்தைப் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டி, பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவருடைய பெயரை போட்டு ஓட்டி இருக்கிறார்கள்.அதிலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒன்றும் பாரதிய ஜனதா கட்சியின் போஸ்டர் அல்ல.

இரண்டாவது நாங்கள் இன்று சொல்லலக் கூடிய எந்த வாதத்தையும், நேரடியாக ஒரு திமுக- காரர்கள்கூட எதிர்கொண்டு பேச முடியவில்லை. ஒரு விஷயத்தை நாங்கள் சொல்கிறோம் என்றால், பதிலுக்கு நீங்கள் சொல்வது தவறு, இது சரி இல்லை... அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லை. எதுவுமே பேச முடியாமல் ஒரு தேசிய தலைவரை போஸ்டர் ஒட்டித்தான் அசிங்கப்படுத்துவீர்களா?
அமித் ஷாவை அவர்கள் கேவலப்படுத்துவோம் என்று நினைத்து திமுக தங்களையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகையால், காவல்துறையிடம் சொல்லி இருக்கிறோம். இவ்வளவு பிரிண்டிங் பிரஸ் இருக்கிறது. இந்த போஸ்டரை யார் அடித்தார் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். அது உங்கள் வேலைதானே...

யாராவது நல்ல விஷயத்தை செய்ய போனால் தடுக்கிறீர்கள். எங்கள் அக்கா தமிழிசை போனால் தடுக்கிறீர்கள். அண்ணன் ஏ.பி.முருகானந்தம் சென்றால் தடுக்கிறீர்கள். இந்த வேலைகள் எல்லாம் செய்கிறீர்களே... யார் போஸ்டர் அடித்தார்கள் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள் எல்லோருக்கும் தெரியட்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக குழந்தைகள் மீதான யுத்தம்... முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்...!