போதைப்பழக்கத்தால் இளைஞர்கள் திசைமாறி வருகின்றனர். இந்நிலையில் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் அரசு மற்றும் காவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி சிறுவர்கள் வரை போதைப்பழக்கம் வேறூன்றி உள்ளது சமீபத்திய குற்ற சம்பவங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. சிறுவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த வேண்டிய இளைஞர்கள் சிலர், அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் நடந்து கொள்வது பெரும் வருத்தத்தை தருகிறது. இவ்வாறான ஒரு செயல், திருச்சி வாளாடியில் உள்ள பள்ளியில் அரங்கேறி உள்ளது.

போதையில் பள்ளிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட ஆசிரியர்களையும் மிரட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து வாளாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தின் பின்புற கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை போதையில் ஒரு பெண்ணுடன் இளைஞர் இருந்துள்ளனர். இதை அறிந்த அப்பள்ளி ஆசிரியர்கள், அவர்களை அங்கிருந்து கிளம்ப சொல்லி உள்ளனர்.
இதையும் படிங்க: நாடோடி பட பாணியில் பெண் கடத்தல்.. ஒன் சைடு காதலால் வினை.. கடத்தல் நண்பர்கள் கூண்டோடு கைது..!

அப்போது அந்த நபர் மிரட்டும் தொனியில் பேசவும், ஆசிரியர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது அந்த இளைஞர், மது போதையில் நள்ளிரவு இங்கு வந்து படுத்திருந்தோம். இப்போது செல்கிறோம். நாங்கள் இங்கு வந்தது என்ன தவறு என மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். மேலும் பள்ளியில் நள்ளிரவில் படுத்துவிட்டு செல்வதற்கு இது விடுதியா எனக் கேட்டதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை என மிரட்டி உள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளியில் நள்ளிரவில் பள்ளிக்குள் வந்து இருவரும் ஒன்றாக படுத்திருந்தும் தற்போது நாங்கள் கிளம்புகிறோம் என மிரட்டிய சம்பவம் கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்களுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது குற்ற செயல்களுக்கும் துணை போகின்றார்களோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் இரவு நேரத்தில் பாதுகாவலர் யாரும் இல்லையா? ஏன் அங்கு பாதுகாவலர் நியமிக்கப்படவில்லை? இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக கடந்த ஆறு மாதங்களாக பள்ளியில் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் காவல்துறைக்கு தெரிவித்ததால் உள்ளூர்வாசிகள் பள்ளி ஆசிரியரை மிரட்டுவதாகவும் குறிப்பாக தொடர்ந்து குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வருபவர் வாளாடி புது ரோடு பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் தெரியவந்துள்ளது.

தற்போது அப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் அறையின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே மது அருந்திவிட்டு மின்விசிறி டியூப் லைட் போன்றவற்றை அடித்து உடைத்துள்ளனர். காவல்துறைக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஏன் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த குற்றச்செயலை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இது போன்ற அரசு பள்ளியில் இளைஞர்கள் சிலர் மது போதையில் அத்துமீறுவது அப்பகுதி மக்களிடையே முக சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து 4 வீடுகளில் கைவரிசை.. 57 சவரன் நகைகள் மாயம்.. கொள்ளையர்களுக்கு போலீசார் வலை..!