அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு அமெரிக்காவின் பல பகுதிகளில் உணரப்பட்ட நிலையில், ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் ஜூலியன் பகுதி, நிலநடுக்கத்தின் மையமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் கலிபோர்னியாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மியான்மர் நாட்டை திணற வைக்கும் பூகம்பங்கள்.. மீண்டும் இன்று குலுங்கிய கட்டடங்கள்..!
இதையும் படிங்க: விடாது துரத்தும் நிலநடுக்கம்! நேபாளத்தில் குலுங்கிய கட்டடங்கள்..! அரண்டு போன மக்கள்..!