பிரதமர் மோடியின் மொரிஷியஸ் நாட்டு அரசு முறை பயணத்தில் இந்தியாவும் மொரிஷியஸும் பணமோசடி, ஊழல் மற்றும் பல்வேறு நிதி குற்றங்களை எதிர்த்துப் போராட புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடியின் மொரிஷியஸ் பயணத்தின் போது உறுதிப்படுத்தப்பட்டது. இந்தியாவின் அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை அறிவித்த இந்த ஒப்பந்தம், இந்திய அமலாக்கத்துறை மொரிஷியஸின் நிதி குற்ற ஆணையத்துடன் (FCC) இணைந்து செயல்பட உள்ளது.
இதையும் படிங்க: ரயில் கடத்தல் பின்னணியில் இந்தியா..? புழுகினி பாகிஸ்தானின் அழுகினி ஆட்டம்..!
சட்டவிரோத நிதி புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சியை மேம்படுத்தும் முயற்சியாகும். மோடி மற்றும் மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோரின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மோசடி, சொத்து மீட்பு மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு நிதியளிப்பது போன்றவற்றில் ஒத்துழைப்பை இருதரப்பிலும் பகிர்ந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
பொருளாதார குற்றங்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் மத்திய அமைப்பான ED, இந்த ஒப்பந்தத்தை பலப்படுத்துதலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கையை செயல்படுத்தியுள்ளது.
இது இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய பணமோசடியை கண்காணித்து வழக்கு தொடர கூட்டு நடவடிக்கைகளை ஆராய்ந்து, விவாதங்களின் மூலம் இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது.
மொரிஷியஸ் நாட்டில் நீண்ட காலமாக இந்தியாவில் மோசடி செய்யப்படும் பணத்தை மறைத்து வைக்கும் இடமாக பார்க்கப்படுகிறது.
அமலாக்கத்தை தாண்டி, இந்த ஒப்பந்தம் பயிற்சி, அனுபவ பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது. டிஜிட்டல் தடயவியல் கருவிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ள ED உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது இரண்டு நாடுகளின் தரப்பிலும் தரவு பறிமுதல் மற்றும் பகுப்பாய்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ED-யின் இயக்குநர் ராகுல் நவின், பேச்சுவார்த்தைகளின் போது இந்திய அமலாக்கத் துறையின் சாதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

பணமோசடி வழக்குகளில் உயர் தண்டனை விகிதங்கள் மற்றும் சொத்துக்களை கண்டறிந்து மீட்பதில் வலுவான பதிவு ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பணமோசடி தடுப்புச் சட்டத்தில் உள்ள ஒரு விதியை அவர் எடுத்துரைத்தார். இது விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் போதே பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அனுமதிக்கிறது. இதன் மூலம் ஏமாற்றப்பட்டவர்களுக்கு ரூ.226 கோடி திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் நிதி குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. உள்நாட்டு ஊழல்கள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை கையாளும் மோடி அரசாங்கத்தின் முக்கியமான அஜெண்டாவாக இது உள்ளது.
மொரிஷியஸைப் பொறுத்தவரை ஊழல் மற்றும் கள்ளப் பணத்தை பதிக்க வைக்கும் இடமாக உள்ளதால் அவற்றை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி மற்றும் இந்திய அமலாக்கத்துறை நடவடிக்கை அமைந்துள்ளதாகவே இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்க மது வகைகளுக்கு 150% வரி விதிக்கும் இந்தியா.. மீண்டும் வரிப் பிரச்சனையை கிளப்பிய ட்ரம்ப் அரசு..!