×
 

அதிமுக- பாஜக கூட்டணி உறுதியானது... அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி..!

எடப்பாடி பழனிசாமியுடன் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், எம்.பி.க்களும் உடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சருடன் சந்தித்துப் பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், எம்.பி.க்களும் உடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: கட்சி அலுவலகமா..? இல்லை எடப்பாடியாரின் ரசிகர் மன்றமா..? மீண்டும் அதிமுகவில் போட்டோ சர்ச்சை..!

இன்று காலை விமானம் மூலம் டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியை அங்கிருக்கும் அதிமுக எம்.பி.,கள் தம்பிதுரை, சி.விசண்முகம் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். முன்னதாக இன்று காலை ஜி.கே.வாசன், அமித்ஷாவை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சென்று சந்தித்து இருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. டெல்லியில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார்.

அவர் அமித்ஷாவை சந்தித்திருக்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களும் டெல்லி சென்றனர். இந்நிலையில் அமித் ஷாவின் இல்லத்திற்கு 8 மணிக்கு மேல் அதிமுக நிர்வாகிகளுடன் சென்ற எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்து பேசி வருகிறார். அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பால் கூட்டணி உறுதியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள். நாளை நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை புறப்படுகிறார்கள்.

முன்னதாக ''டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன். பிரத்யேகமான நபரை பார்க்க வரவில்லை'' என டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார்.

இதையும் படிங்க: டெல்லி பயணம் இதுக்குதான்... ரகசியத்தை போட்டுடைத்த எடப்பாடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share