ரயில் கடத்தல் பின்னணியில் இந்தியா..? புழுகினி பாகிஸ்தானின் அழுகினி ஆட்டம்..!
பலுசிஸ்தானில் அமைதியின்மையைத் தூண்டுவதற்கு பி.எல்.ஏ போன்ற குழுக்களை இந்தியா ஆதரிப்பதாக பாகிஸ்தான் பலமுறை குற்றம் சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா ஆதாரமற்றது என்று நிராகரித்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த ரயில் கடத்தல் சம்பவத்திற்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பலூச் விடுதலை படையினரின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் அமர்ந்திருப்பதாகவும், அவர்கள் இந்தியாவால் ஆதரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது. ரயில் கடத்தல் தொடர்பான அழைப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இஸ்லாமாபாத் மாற்றிவிட்டதா என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளரிடம் கேட்கப்பட்டது. இது குறித்து ஷஃப்கத் அலி கான் கூறுகையில், எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. உண்மைகளும் மாறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது. நான் குறிப்பிட்டது என்னவென்றால், இந்த சம்பவத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் அழைப்புகளுக்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. நான் சொன்னது இதுதான்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரயில் கடத்தலுக்கு பழி: கோபத்தில் பாகிஸ்தானின் மூக்கை உடைத்த தலிபான்கள்..!
ஜாஃபர் எக்ஸ்பிரஸ் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டது. அப்போதிருந்து, பாகிஸ்தான் இராணுவமும், ஷாபாஸ் அரசசும் நேரடியாக இந்தியாவை பெயரிடாமல் குற்றம் சாட்டி வருகின்றன. அதே நேரத்தில் அந்நாட்டின் இராணுவம், உளவுத்துறை அதிகாரிகளின் கடுமையான பாதுகாப்பு தோல்விகள் குறித்து மௌனம் காக்கின்றன. இருப்பினும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று ஆப்கானிஸ்தான் கூறியது. உங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் உள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.
ஒவ்வொரு நாளையும் போலவே, மார்ச் 11 அன்று, ஜாஃபர் எக்ஸ்பிரஸ் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குப் புறப்பட்டது. இந்த ரயிலில் சுமார் 450 பயணிகள் இருந்தனர். பலோன் மலைகளில் உள்ள ஒரு சுரங்கப்பாதை வழியாக ரயில் சென்று கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்து ஆயுதம் ஏந்திய பி.எல்.ஏ பயங்கரவாதிகள் அதைத் தாக்கினர். இதில், 21 பயணிகள் உட்பட 58 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் 33 பலுஜ் போராளிகளைக் கொன்றனர். பலுசிஸ்தானில் அமைதியின்மையைத் தூண்டுவதற்கு பி.எல்.ஏ போன்ற குழுக்களை இந்தியா ஆதரிப்பதாக பாகிஸ்தான் பலமுறை குற்றம் சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா ஆதாரமற்றது என்று நிராகரித்துள்ளது.
இதையும் படிங்க: ரயில் கடத்தல்: பாகிஸ்தானின் பச்சைப்பொய்... பெரும் கொடூரத்துக்கு தயாரான பி.எல்.ஏ..!