×
 

டால்பின்களின் வரவேற்புடன் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..!

9 மாதங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர்.

விண்வெளியில் 286 நாட்களுக்குப் பின் அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்சுலில் இன்று அதிகாலை வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர். இவர்களுடன் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹாக், ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் காஸ்மோநட் அலெக்சான்ட்ரா கோர்பனோவ் ஆகியோரும் பூமிக்குத் திரும்பினர். 

அமெரிக்க வளைகுடாவில் ஃபுளோரோடாவில் உள்ள தலஹசி கடற்பகுதியில் பாராசூட் உதவியுடன் டிராகன் கேப்சுல் வெற்றிகரமாக இந்திய நேரப்படி அதிகாலை 3.47 (அமெரிக்க நேரப்படி மாலை 5.57) மணிக்கு கடலில் இறங்கியது. 

பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும், மணிக்கு தோரயமாக 3ஆயிரம் கி.மீ வேகத்தில் கேப்சுல் தரையை நோக்கி பயணித்தது. இதன் வேகத்தைக் குறைக்கும் வகையில் ப்ளோரிடா கடற்பகுதிக்குள் வந்ததும், 3 பாராசூட்கள் விரியத் தொடங்கி படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு, பாதுகாப்பாக கடலில் இறங்கியது. 

இதையும் படிங்க: பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பத்திரமாக தரையிறங்கியது டிராகன்.. சாதித்த நாசா..!

கேப்சுல் கடலில் விழுந்த இடத்தில் டால்பின் மீன்கள் அதிகம் இருந்ததால், டால்பின் மீன்கள் வரவேற்புடன் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமிக்குத் திரும்பினர். அதன்பின் மீட்புபடை கப்பல் உதவியுடன் கடலில் விழுந்த கேப்சுல் மீட்கப்பட்டு, கப்பலில் ஏற்றப்பட்டது. 

கப்பில் இருந்த நாசா ஊழியர்கள் அந்த கேப்சுலைத் திறந்து, அதில் இருந்த சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உள்ளிட்ட விண்வெளி வீரர்களை வெளியே அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்கள் 4 பேரும் 45 நாட்கள் சிகிச்சை, உடற்பயிற்சிக்குப் பின் வழக்கமான பணிக்குத் திரும்புவார்கள்.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்டார்லைன் போயிங் விண்கலம் மூலம் சென்றனர். 8 நாட்களில் பணியை முடித்து பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், இவர்கள் சென்ற விண்கலம் பழுதாகி அதிலிருந்த ஹீலியம் வாயு முழுவதும் வெளியேறியது. இதனால் இருவரும் பூமிக்கு திரும்பமுடியாமல் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலேயே சிக்கினர். 

இதையடுத்து இவர்களை மீட்க நாசா கடந்த செப்டம்பரில் டிராகன் ராக்கெட் மூலம் 2 விண்வெளி வீரர்களை அனுப்பியது. ஆனாலும் அதுவும் பலன் அளிக்காததைத் தொடர்ந்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், டிராகன் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரையும் பூமிக்கு அழைத்துவர முடிவு செய்யப்பட்டது. 

இதன்படி விண்வெளி வீரர்கள் ஆனி மெக்லைன், விமானி நிக்கோல் ஆயெர்ஸ், ஜப்பானிய விண்வெளி வீரர் டகுயா ஒனிஷா, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் கிரில் பெஸ்கோவ் ஆகியோருடன் டிராகன் ராக்கெட் கடந்த ஞாயிறன்று விண்வெளிக்குப் புறப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.

இந்நிலையில் அனைத்து பொறுப்புகளையும் டிராகன் ராக்கெட்டில் வந்த விண்வெளி வீரர்களிடம் ஒப்படைத்த சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் இருவரும் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்குத் திரும்பினர். 

டிராகன் ராக்கெட்டின் கேப்சூலுக்குள் சுனிதா வில்லிம்யஸ், வில்மோர், ரஷ்ய வீரர் கிரிஸ்பெஸ்கோவ், நிக் ஹாக் ஆகியோருடன் நேற்று காலை 10.35 மணிக்கு ராக்கெட் கேப்சூல் சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட்டு பிரியத் தொடங்கி,17 மணிநேரப் பயணத்துக்குப்பின் பூமிக்கு இன்று (19ம்தேதி) அதிகாலை 3.47 மணிக்கு ப்ளோரிடா கடலில் விழுந்தது.

இதையும் படிங்க: எப்போது தரையிறங்குகிறார் சுனிதா வில்லியம்ஸ்? வெளியான புதிய தகவல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share