×
 

21 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த 'அந்த' பொருள்! ஸ்கேன் செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி..!!

தெலுங்கானாவில் இளைஞர் ஒருவர் குழந்தையாக இருந்த போது விழுங்கிய பேனா மூடியை டாக்டர்கள் 21 ஆண்டுகள் கழித்து வெற்றிகரமாக நீக்கி உள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த 26 வயது இளைஞருக்கு கடந்த சில நாட்களாவே இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தீவிர எடையிழப்பும் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வாலிபர், மாதப்பூரில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். முதலில் சிறு, சிறு சோதனைகள் செய்து பார்த்த டாக்டர்கள் இறுதியில் சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என தீர்மானித்தனர். நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே இவ்வாறு ஏற்படும் என்றும். சி.டி ஸ்கேனில் அது என்னவென கண்டுபிடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

டாக்டர்கள் ஆலோசனைப்படி அவரும் ஸ்கேன் எடுத்துள்ளார். ஸ்கேன் ரிசல்ட்டை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இளைஞரின் நுரையீரலில் சிறிய கட்டி போன்ற ஒன்று இருப்பதை கண்ட டாக்டர்கள் முதலில் அது கேன்சர் கட்டியாக இருக்கலாம் என தொடர்ந்து ஆய்வு செய்தனர். முடிவில் அது கேன்சர் கட்டி இல்லை என்பதை அறிந்ததும், இளைஞரின் சகோதரனை அழைத்து விசாரித்துள்ளனர். இளைஞர் எதையாவது விழுங்கிவிட்டாரா? அதனால் தொந்தரவு ஏற்பட்டதா என டாக்டர்கள் விசாரிக்க அவரது சகோதரர் அதை மறுத்துள்ளார். 

இதையும் படிங்க: மருமகனுக்கு தீ வைத்த மாமியார்..! தீயில் கருகிய உடலை பார்த்து ரசித்த குரூரம்..!

நல்லா தான் டாக்டர் இருந்தான்.. திடீரென உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டதாகவே அவரும் கூறி இருக்கிறார். அதை மறுத்த டாக்டர்கள், நன்றாக நினைவு படுத்தி பார்க்கும் படி கூறி உள்ளனர். இப்போது விழுங்க வில்லை என்றாலும், 3 மாதத்திற்கு முன்னால், 6 மாதத்திற்கு முன்னால் என நினைவு படுத்தி பாருங்கள் என்று சொன்னதும் அவரது சகோதரருக்கு நினைவு வந்துள்ளது. வயிற்றுவலியால் துடித்த இளைஞர் 5 வயதாக இருந்த போது பேனாவின் மூடியை முழுங்கிவிட்டதாக கூறி இருக்கிறார். ஆனால் புரையேறிதாகவோ, சுவாசிக்க சிரமப்படாமலோ சிறுவன் சுற்றித்திரிந்ததால் பெற்றோர் அவர் விளையாட்டாய் ஏதோ சொல்வதாக நினைத்து விட்டனர்.

இந்நிலையில் 5 வயதில் முழுங்கிய பேனா மூடி, நுரையீரல் குழாய்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டுள்ளது. 21 வருடங்களாக உடலில் தங்கி இருந்து, அதன்மீது தசைநார்களும் வளரதுவங்கி உள்ளது. இதன் காரணமாகவே தற்போது அந்த இளைஞருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அதை வெற்றிகரமாக அகற்றி உள்ளனர்.

இதுகுறித்து பேசிய நுரையீரல் நிபுணர் டாக்டர் சுபகர் நாதெல்லா விளக்கம் அளித்துள்ளார். கடந்த 10 நாட்களாக நோயாளியின் நிலை மோசமடைந்து அடைந்தது. தூங்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது என்றார். சி.டி., ஸ்கேன் எடுத்ததில் அவரது இடது கீழ் நுரையீரலில் தொற்று இருப்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் ஒரு அடைப்பு இருப்பதாக நாங்கள் சந்தேகித்தோம். ஆனால் உள்ளே ஒரு பேனா மூடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இன்னும் சில ஆண்டுகள் ஆகியிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும் என டாக்டர் சுபகர் நாதெல்லா கூறினார்.


 

இதையும் படிங்க: குடிகார அண்ணன் செய்த காரியம்..! ஆத்திரம் தீர கத்தியால் குத்திக்கொன்ற தம்பி.. நடுரோட்டில் வெறிச்செயல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share