தனிமையில் இருக்க சென்ற கள்ளக்காதல் ஜோடி... ரிசார்ட்டில் நடந்த விபரீதம்!!
ஏலகிரியில் ரிசார்ட் ஒன்றில் தங்கிய ஜோடி செய்த செயல் அப்பகுதியையே பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் மக்கள் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைபகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ரிசார்ட்களில் தங்கி இயற்கையை ரசித்து செல்கின்றனர். அந்த வகையில் ஏலகிரியில் ரிசார்ட் ஒன்றில் தங்கிய ஜோடி செய்த செயல் அப்பகுதியையே பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. இவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், காமாட்சிக்கு புதுச்சேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இது காதலாக மாறியுள்ளது. இருவரும் பேசி பழகி அடுத்தகட்டமாக வெளியே செல்ல தொடங்கியுள்ளனர். இவர்களின் கள்ளகாதல் அடுத்த கட்டத்தை அடைய ஏதுவாக இருவரும் ஏலகிரி உள்ள ரெசார்ட்டில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வகுப்பறையில் செல்போன் பயன்படுத்திய மாணவன்.. பேராசிரியர் கண்டித்ததால் விபரீதம்.. தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை..!
இவர்களின் கள்ளகாதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரிந்ததை அடுத்து காமாட்சியின் அக்கா, இருவரையும் கண்டித்துள்ளார். இருந்தும் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் எதிர்ப்புகள் அதிகமானது. இதனால் காமாட்சியும், ஜெயராமனும், வீட்டை விட்டு வெளியேறி ஏலகிரி மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் தங்கியதோடு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இருவரும் எலி மருந்து வாங்கி கொண்டு, ரிசார்ட்டுக்கு சென்றதாகவும் ஒன்றாக விஷம் குடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில், ஜெயரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காமாட்சி உயிருக்கு ஆபாத்தான நிலையில் போராடி வந்துள்ளார். இதுக்குறித்து தலவல் அறிந்து வந்த போலீசார் ஜெயராமின் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காமாட்சியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஏலகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 9வது மாடியில் இருந்து குதித்த ஆசிரியை... காரணத்தை கேட்ட போலீஸ்க்கு அதிர்ச்சி!!