அமெரிக்காவில் பாகிஸ்தானின் ஆடம்பர ஹோட்டல்… 'விளையாட்டு'க்கு ஆப்பு வைத்த டிரம்ப்..!
நமது சொந்த நாட்டில் சட்டவிரோத குடியேறிகளை தங்க வைக்க ஒரு வெளிநாட்டு அரசுக்கு பணம் செலுத்துகிறார்கள். இது பைத்தியக்காரத்தனம்
ஏழை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு பெரிய அடியைக் கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்குச் சொந்தமான புகழ்பெற்ற ரூஸ்வெல்ட் ஹோட்டலை புலம்பெயர்ந்தோர் தங்குமிடமாக மாற்றுவதற்கான 220 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நியூயார்க் நகரம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவிற்குள் குடியேறுவதை எளிதாக்குவதற்காக அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பதாகக் குற்றம்சாட்டி, டிரம்ப் நிர்வாகமும் அதன் ஆதரவாளர்களும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் இந்த நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்கின் மேயர், எரிக் ஆடம்ஸ், புலம்பெயர்ந்தோரை தங்க வைப்பதில் பெயர் பெற்ற இந்த தங்குமிடத்தை மூடுவதாக அறிவித்துள்ளார். இந்த ஹோட்டலின் 1015 அறைகளில் ஒரு இரவுக்கு $200 என்ற கட்டணத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுடனான மூன்று வருட, $220 மில்லியன் ஒப்பந்தத்தின் கீழ், ரூஸ்வெல்ட் ஹோட்டல் தங்குமிடம், உணவு விடுதி மே 2023 -ல் திறக்க திட்டமிடப்பட்டது. இது புகலிடம் கோருபவர்களுக்கு வருகை மையமாகவும் தங்குமிடமாகவும் செயல்பட இருந்தது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஜிந்தாபாத்..! ரோஹித் அவுட்டானதால் கொண்டாட்டம்... தரைமட்டமான இஸ்லாமியரின் கடை..!
பாகிஸ்தானின் அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேசனல் ஏர்லைன்ஸ் 2005 ஆம் ஆண்டில் இந்த ஹோட்டலில் சவுதி பங்குகளை $36 மில்லியனுக்கு வாங்கியது. பாகிஸ்தான் அரசு ஹோட்டலின் மீது உரிமையைப் பெற்றுள்ளது. அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையால் ரூஸ்வெல்ட் ஹோட்டலை தாண்டி நகரம் முழுவதும் தங்குமிடமாகப் பயன்படுத்துவது குறித்து நியூயார்க் நகர அதிகாரிகளை பரிசீலிக்கத் தூண்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மே 2023 முதல் பிப்ரவரி 2024 வரை, ஹோட்டலில் சேவைகளுக்காக 173,000 பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த ஹோட்டல் புலம்பெயர்ந்தோர் தங்குமிடமாக மாற்றப்பட்ட பிறகு பல சிக்கல்களை எதிர்கொண்டது. ஹோட்டலுக்கு வெளியே அகதிகள் முகாமிட்டிருப்பதை பார்த்து வலதுசாரிகளுகம், சில நியூயார்க் நகரவாசிகளையும்கூட கோபப்படுத்தியது. அமெரிக்க வரி செலுத்துவோரின் செலவில், சட்டவிரோத குடியேறிகளை சொகுசு ஹோட்டல்களில் தங்க வைப்பதாக ஜனநாயகக் கட்சியினர் மீது டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டினர்.
டிரம்ப் ஆதரவாளரும், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி, ஹோட்டலில் குடியேறியவர்களை நிறுத்தியதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். 'சட்டவிரோத குடியேறிகளுக்கான வரி செலுத்துவோர் நிதியளிக்கும் ஹோட்டல் பாகிஸ்தான் அரசிற்கு சொந்தமானது, அதாவது நியூயார்க்கில் வரி செலுத்துவோர் உண்மையில் நமது சொந்த நாட்டில் சட்டவிரோத குடியேறிகளை தங்க வைக்க ஒரு வெளிநாட்டு அரசுக்கு பணம் செலுத்துகிறார்கள். இது பைத்தியக்காரத்தனம்' என்று ராமசாமி கூறியிருந்தார்.
இந்தியாவில் வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்திற்காக அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமையில் இருந்து 21 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்வது பற்றி பேசிய அதே நேரத்தில், பாகிஸ்தானுக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலில் நடந்த மோசடியை டிரம்ப் சமீபத்தில் வெளிப்படுத்தினார். நியூயார்க் நகரில் உள்ள குறிப்பிடப்படாத ஒரு ஹோட்டலுக்கு பைடன் நிர்வாகம் 59 மில்லியன் டாலர்களை செலுத்தியதாக டிரம்ப் கூறினார். டிரம்பின் அருகில் நின்ற மஸ்க், நியூயார்க் நகர நிர்வாகம் ஹோட்டல் அறைக்கு வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு அதிகமாக செலுத்துவதாகக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ICC championship: கிங் கோலி ரிட்டர்ன்ஸ்.. பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்.. மாஸ் காட்டிய இந்திய அணி.!