தெலங்கானாமாநிலம் நல்கொண்டா மாவட்டம் டமராச்செர்லா மண்டலத்தில் உள்ள போட்டலா பாலேம் கிராமத்தில் நர்கெட் பல்லி - அடங்கி சாலையில் பலநூறு ஏக்கர் கணக்கில் விவசாயிகள் நெற்பயிர்களை பயிருட்டு வருகின்றனர். இன்று அதிகாலை விவசாயி ஒருவர் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வயலுக்கு சென்றுள்ளார். அப்போது வயலில் ரூபாய் நோட்டு கட்டுகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விவசாயிகள் வயல்களில் ரூபாய் நோட்டு கட்டுகளுடன் பையைக் பார்த்ததும் விவசாயிகள் யாரோ ஒரு பை நிறைய ரூபாய் நோட்டுகளை விட்டுச் சென்றிருப்பதாக மற்ற விவசாயிகளும் ஆச்சரியம் அடைந்தனர்.

அதில் ₹500 நோட்டுகளின் 40 கட்டுகளைப் பார்த்த விவசாயிகள், தங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து எடுத்து கொண்டு சென்றனர். வயல் வெளியில் ரூபாய் நோட்டுக்கட்டுகள் சிதறிக் கிடந்ததும், அதை சில விவசாயிகள் பங்கு போட்டது குறித்தும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரூரல் சி.ஐ. வீர பாபு விவரங்களை சேகரித்து, மீதமுள்ள ரூபாய் நோட்டு கட்டுகளை கைப்பற்றினார். அதை ஆய்வு செய்த போது போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தோற்றத்தில் அசல் ரூபாய் நோட்டுகளை போன்று இருக்கும் இந்த ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்கு பதிலாக இந்திய குழந்தைகள் வங்கி என்று பொருள்படும் படி இந்தியன் சில்ரென்ஸ் பேங்க் என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டு இருந்தன.
இதையும் படிங்க: விசாரணை என்கின்ற பெயரில் போலீஸார் செய்யும் கொடுமையை அனுமதிக்க மாட்டோம்...உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

எனவே இந்த ரூபாய் நோட்டு கட்டுகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது கள்ளநோட்டு கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பயிர் வயல்களில் கள்ள ₹500 நோட்டுகள் கண்டறியப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. டமராசர்லா மண்டலத்தில் கடந்த காலங்களில் கள்ளநோட்டு புழக்கத்தில் விடப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதே கும்பல் மீண்டும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் இதுபோன்ற நோட்டுகள் குழந்தைகள் விளையாடவும், பள்ளிகளில் ப்ராஜெக்ட் ஒர்க் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவ்வளவு அதிக அளவில் ஒரே மாதிரியான ₹500 நோட்டுகள் இருப்பது கள்ள நோட்டுகளை வைத்து யாரையே ஏமாற்ற திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே அதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: கத்தி கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸ் இல்லை.. 2 நாட்களாக தொடரும் மீட்பு பணிகள்.. சுரங்கத்தில் சிக்கிய 8 பேரில் நிலை என்ன?