சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக சேலம் நோக்கி 5 பேர் ஆம்னி வேன் ஒன்றில் சென்றுள்ளனர். அப்போது அந்த ஆம்னி வேன் மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன் பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆம்னி வேன் ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டு, காரில் பயணம் செய்த ஐந்து பேரையும் உடனடியாக முன்னெச்சரிக்கையாக வெளியேற்றியுள்ளார். காரின் முன் பகுதியில் புகைமண்டலமாக உருவெடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென காரில் தீ பற்றியுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் களைகட்டிய மாசி திருவிழா.. வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல்!
கண்ணிமைக்கும் நொடியில் தீயானது மளமளவென கார் முற்றிலும் பரவியுள்ளது. என்னால் செய்வதறியாமல் திகைத்த ஓட்டுனர், அருகில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

முன்னதாக வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் வாழப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், காரில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் போராடி அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: லேடி கெட்டப் போட்டு இரவில் விசிக நிர்வாகி சில்மிஷம்..! இயக்குநரின் மனைவிக்கு டார்க்கெட்..!