இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட்ள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 6 ஆண்டுகள் பணியாற்றிய சக்திகாந்த தாஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றார். இப்போது ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு ஒரு பெரிய பொறுப்பு கிடைக்கப் போகிறது. தற்போது பிரமோத் குமார் மிஸ்ரா (பி.கே.மிஸ்ரா) பிரதமரின் முதன்மைச் செயலாளர்-1 ஆக உள்ளார். அவருடன் சேர்ந்து, சக்திகாந்த தாஸ் இப்போது முதன்மை செயலாளர்-2 இடத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சக்திகாந்த தாஸ் 1980 கேடர் ஐஏஎஸ் அதிகாரி.

அமைச்சரவையின் நியமனக் குழு சக்தி காந்த தாஸின் நியமனம் பிரதமரின் பதவிக் காலத்துடன் அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முந்தையதோ அதுவரை முடிவடையும் என்று தெரிவித்துள்ளது. அவர் பிரதமரின் முதன்மைச் செயலாளராக-2, முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2018 முதல் ஆறு ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் தலைவராக சக்திகாந்த தாஸ் இருந்தார். 40 வருடங்களுக்கு மேலாக பல்வேறு நிர்வாகத் துறைகளில் அவருக்கு மிகப் பெரிய அனுபவம் வாய்ந்தவர். மத்திய, மாநில அரசுகளில் நிதி, வரிவிதிப்பு, தொழில், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

தனது ஆறு ஆண்டு பதவிக்காலத்தில், கோவிட்-19 தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி, ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க சவால்களின் போது சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கியை வழிநடத்தினார்.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.. ஐந்து பேரை லாபகமாக பிடித்த போலீஸ்.
.
தனது 6 ஆண்டுகால ரிசர்வ் வங்கி பதவிக்காலத்தில் கடைசி நான்கு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதத்திற்கு மேல் பராமரிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 1980 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான தாஸ், வருவாய்த் துறை, பொருளாதார விவகாரத் துறையின் செயலாளராகவும் இருந்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் 15வது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், இந்தியாவின் ஜி-20 ஷெர்பாவாகவும் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்குகிறது இலங்கை-நாகை கப்பல் வழி பயணம்..! கப்பல் நிறுவனம் அளித்த சலுகைகள் என்ன என்ன தெரியுமா..?