புதுச்சேரி மற்றும் காரைக்கால் கல்லூரி மாணவியருக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
புதுச்சேரியின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சில அறிவிப்புகளை வெளியிட்டார். புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து இயக்கப்படுவது போல கல்லூரி மாணவியருக்கும் இலவச பேருந்து சேவை தொடங்கப்பட இருக்கிறது என அறிவித்தார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த இலவச பேருந்து சேவை வரும் கல்வி ஆண்டு முதல் துவங்கும் என்று அறிவித்திருக்கிறார். இதேபோல நீட் பயிற்சி சிறப்பு பயிற்சிக்காக நான்கு மையங்கள் அமைக்கப்படும் என்றும், இரண்டு புதுச்சேரி நகரத்திலும், இரண்டு கிராமத்தில் அமைக்கப்படும் என அறிவித்தார். இதேபோல அரசு இட ஒதுக்கீட்டில் சேரும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் முழு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் கோடை வெயில்.. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு..!
இதேபோல காவல் துறையில் காலியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ஆய்வாளர்கள், கடலோட ஊர்காவல் படை வீரர்கள் என 515 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முன்னணி நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு நடத்த இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல தேசிய சர்வதேச பிராந்திய போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பயண செலவை அரசே முழுமையாக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இதேபோல 1840 வீரர்களுக்கு அதாவது இவர்கள் வந்து பதக்கம் வென்றிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2017ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகளாக இவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதன்படி, நிலுவையில் உள்ள கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. எஸ்.ஐ-யின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி..!