திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ராமன். (வயது 26). பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ராகுல் (வயது 25) இருவரும் நண்பர்கள். எப்போதும் ஒன்றாக சுற்றி வருவது மேலும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது என இருவரும் ஒன்றாகவே சுற்றித்திரிந்து வந்ததாகவே கூறப்படுகிறது. இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராமன் நேற்று ராகுலுக்கு தெரியாமல் மற்றொரு நண்பனுடன் சேர்ந்து ஆதியூர் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ராகுல் அங்கு சென்று ராமனிடம் என்னை விட்டுவிட்டு இங்கு வந்து எதற்காக குடிக்கிறாய் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏன் நான் குடித்தால் என்ன? என ராமன் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. உடன் இருந்த நண்பர் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்து விட முயற்சித்துள்ளார். இதனால் ராகுல் மேலும் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனக்கும். ராமனுக்கும் இடையில் நீ எதற்கு வருகிறாய் எனக்கேட்டு ராகுல் அவரிடமும் சண்டை பிடித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பரீட்சைக்கு நேரமாச்சு.. பேருந்துக்காக காத்திருந்த +2 மாணவி.. நிறுத்தாமல் போன டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்..!

இதனால் மூவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. அப்போது ராமன், தன் உடன் குடித்த நண்பருக்கு சப்போர்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகுல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீடீரென ராமனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமனை அவருடன் இருந்த நண்பர் தாங்கி பிடுத்துள்ளார். பின்னர் அவர் மற்றவர்களை உதவிக்கு அழைத்து கூக்குரலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து ராமனை மீட்டனர்.

பின்னர் ராமனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ராமனை பரிசோதித்த மருத்துவர்கள், ராமனின் நிலை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளதாக கூறினர். மேலும் ராமனை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து ஆதியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ஆதியூர் போலீசார் தப்பி ஓடிய ராகுலை தீவிரமாக தேடி வருகின்றனர். தனது நண்பன் மற்றொரு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: ஹுசைனி, மனோஜ், கருப்பசாமி பாண்டியன்..! அடுத்தடுத்து உயிரிழந்த பிரபலங்கள் அதிர்ச்சியில் தமிழகம்..!