108 வைணவ திவ்விய தேச கோயில்களில் ஒன்றான செம்பனார்கோவில் அருகே தலைசங்காட்டில் நான்மதிய பெருமாள் கோயிலானது பெரும் சிறப்பை கொண்டுள்ளது. நீண்ட வரலாற்றை கொண்ட பூம்புகாரில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் மாசி மாத தன்று பூம்புகார், கலக்கும் சங்கமத் துறையில் தீர்த்தவாரி செய்ததாகவும் இந்த வழிபாடு பல காரணங்களால் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது மாசிமக திருவிழா கொண்டாடப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து பூஜைகளுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி தீர்த்தமாடுதல் நிகழ்ச்சியை ஒட்டி, கோயிலில் இருந்து பெருமாளை தோளில் சுமந்து மேல தாளங்களுடன் தோலில் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர்.
இதையும் படிங்க: வாடியில் தேங்கிய மழைநீர்.. ஜல்லிக்கட்டு போட்டியின்றி களை இழந்த கோயில் திருவிழா!
இதனை அடுத்து சங்கமத்துறையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பெருமாள் சிலையானது வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூம்புகாரில் இருந்து நீரானது எடுக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் களைகட்டிய மாசி திருவிழா.. வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல்!