திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமாக கட்சி தலைவர் ஜி.கே வாசன் கலந்துகொண்டு தேர்தல் பணிகளில் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி என்பதால் இருட்டிலே நடப்பவர்கள் பயத்தில் சத்தமாக பாடுவது நடப்பது போல் முதலமைச்சரும் அமைச்சர்களும் மத்திய அரசை பற்றி குறை கூறி வருகிறார்கள் .

வெளிப்படை தன்மை இல்லாத அரசு திமுக. அவர்களுடைய மடியிலேயே கணம் இருப்பதால் தோல்வி பயத்தை வைத்துக்கொண்டு இரு மொழிக் கொள்கை ,தொகுதி சீரமைப்பு ,மாநில சுயாட்சி என மக்களை திசை திருப்பி வருகின்றனர். இன்னும் ஒரு சட்டமன்ற தேர்தலில் திமுகவின் நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை.
இதையும் படிங்க: டிடிவிக்கு எதிரான வழக்கு.. வாபஸ் பெற்றார் இபிஎஸ்.. காரணம் என்ன?
திமுகவின் ஆட்சியும் அதிகார துஸ்பிரயோகமும் தோல்வியை நோக்கி தமிழகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது . சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரை செயல்பட விடாமல் ஆளுங்கட்சி செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது.

த.மா.க தற்போது கூட்டணியில் மிக முக்கிய கட்சியாக செயல்பட்டு கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இயக்கப் பணி மக்கள் பணி என பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். பலத்தினை பொருத்து கூட்டணியுடன் பேசி எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

அதிமுக பாஜக கூட்டணி என்பதுடன் வரும் காலங்களில் அதிகப்படியான கட்சிகள் கூட்டணியில் அமைய வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டணி முதல் கூட்டணியாகவும் தமிழகத்தில் வெற்றி கூட்டணியாக மக்களை சந்திக்கும் . திமுகவிற்கு தேர்தல் ஜூரம் கடந்த வாரத்திலிருந்து துவங்கிவிட்டது. ஒரு மனிதனுக்கு ஜூரம் அதிகமாகிவிட்டால் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுவது போல திமுகவினர் பேசிக்கொண்டிருக்கின்றனர்.திமுக எந்த தேர்தலிலும் வெற்றி பெற தேர்தல் யுத்திகளை உபயோகித்தாலும் வாக்காளர்கள் அவர்களை வெளியேற்ற தீர்மானித்து விட்டனர் என்பதில் மாற்று கருத்து இல்லை .
இதையும் படிங்க: அமித்ஷா அவசர அழைப்பு.. டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்.. தலைவர் பதவி உறுதியா?