சமீபத்தில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் 'கிலான் பாரே சின்ட்ரோம்' நோய் தொற்று பரவி வருகிறது.மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமான செல்களை தாக்குவதால்,இந்த நோய் ஆட்டோ இம்யூன் என அழைக்கப்படுகிறது. இந்த நோயின் ஒருவகை தான் ஜி.பி.எஸ். இந்த நோய் தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
இருப்பினும் முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயை குணப்படுத்தி விடலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர். ஜிபிஎஸ் எந்த வயதினரையும் தாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக 30 முதல் 50 வயது வரையிலான நபர்களை அதிக அளவில் பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'லவ் ஜி காத்'தை தடுக்க சிறப்பு குழு: மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி ; "ஹிட்லர் கலாசாரம்" என, எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் கிலான் -பார்ரே சிண்ட்ரோம் (ஜி.பி.எஸ்.) எனப்படும் பாதிப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 225 பேருக்கு பாதிக்குது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் 197 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 28 பேர் சந்தேகப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 12 பேர் பலியாகி இருப்பதாகவும், இறந்தவர்களின் ஆறு பேருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள ஆறு பேர் இறப்புக்கு காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதுவரை 179 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 15 பேருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

மாசுபட்ட நீரால் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு நோயாளிகளை பலவீனப்படுத்துவதாகவும் எனவே பொதுமக்கள் தரமான தண்ணீரை சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் கொதிக்க வைத்த தண்ணீரை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உஷார் மக்களே! நண்பகலில் வெளியே போனால் உஷார்!!