வடகிழக்கு பருவமழைக்கு பிறகு தமிழ்நாட்டில் பனிக்காலம் தொடங்கியது. மார்கழி, பங்குனியில் பனி கொட்டியது. அதிகாலை நேரத்தில் எதிரே வருவோர் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மூடுபனி தென்பட்டது. இதனால் நண்பகல் நேரத்திலு இதமான சூழல் ஏற்பட்டது.

தற்போது பனிக்காலம் முடிந்த நிலையில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக உணரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. கரூர் மற்றும் ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது.
இதையும் படிங்க: இறந்த மனைவியுடன் வாழும் கணவர்... இப்படியும் ஒரு காதலா..?
கரூர் மாவட்டத்தின் பரமத்தியில் 100.4 டிகிரி அளவுக்கும், ஈரோட்டில் 100.76 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையத்தில் 99.86 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வரும் 10ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதேநேரம் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக சாரல் மழை பொழிந்தது.
இதையும் படிங்க: 2026ல் தமிழ்நாட்டில் இது நடக்கும்...அண்ணாமலை சொன்ன ஆரூடம்!!