ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் பகுதியைச் சேர்ந்த காசியம்மாள் என்பவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் காசியம்மாளின் மகன் குமார் என்பவருக்கு திருமணமாகி தேவா என்ற மகனும் நந்தினி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேவா மாற்று சமூக பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக பாட்டிகாசியம்மாள் தேவாவுடன் பேச்சுவார்த்தையை துண்டித்து இருந்துள்ளார். மேலும் பூர்வீக சொத்தான வீடு ஒன்றை காசியம்மாள் கல்லூரி பயிலும் அவரது பேத்தி நந்தினி என் பெயரில் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டிவி சத்தத்தால் அரங்கேறிய விபரீதம்.. கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபருக்கு வலைவீச்சு..
இதனால் ஆத்திரமடைந்த தேவா காசியம்மாள் வீட்டுக்குச் சென்று இதுகுறித்து காசி அம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலை எல்லாத்திரமடைந்த தேவா சாலையில் கிடந்த கற்களை கொண்டு காசியம்மாளை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காசியம்மாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காசியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய தேவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காரைக்குடியில் அரங்கேறிய பயங்கரம்.. பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..