குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண். இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் விஷால் சவுத்ரி என்பவர் பாலோ ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்கிற ரீதியில் அந்த இளம் பெண்ணும், விஷால் சவுத்ரியின் ரிக்வெஸ்டை அக்சப்ட் செய்துள்ளார். அதன்பின் இருவரும் நட்பாக பேசி வந்துள்ளனர். ரொம்ப நாளாக சேட்டிங்கில் தொடர்கிறோமே.! டேட்டிங் போகலாமா? என விஷால் சவுத்ரி கேட்டதாக தெரிகிறது. அதற்கு இளம் பெண்ணும் சம்மதித்துள்ளார். அதன் பின் விஷால் சவுத்ரி ஒருநாள் இளம்பெண்ணை ஒட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்துள்ளார்.

சேட்டிங்கில் நன்றாக பேசியவன் தானே. நல்லவனாக இருப்பான் என நம்பி, அவனின் அழைப்பை ஏற்றி அந்த இளம்பெண் விஷால் சவுத்ரியுடன் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இளம்பெண் மீது மேஜையில் இருந்த உணவுப்பொருட்கள் தவறி விழுந்துள்ளது. இதில் இளம்பெண்ணின் ஆடை கறையானதாக கூறப்படுகிறது. கறையான ஆடையுடன் எப்படி வெளியில் செல்வது? எனக்கேட்ட விஷால் சவுத்ரி, இளம்பெண்ணின் ஆடையை சுத்தம் செய்வதற்காக அதே ஓட்டலில் உள்ள அறைக்கு இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்... பாஜக ஆளும் டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

அங்குள்ள குளியலறையில் இளம்பெண் ஆடைகளை கழற்றி சுத்தம் செய்துள்ளார். இது அனைத்தையும் ஏற்கனவே திட்டமிட்டு வைத்தது போல், இளம் பெண் உடை மாற்றுவதை விஷால் சவுத்ரி ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த பெண், குளியலறையில் இருந்து வெளியே வந்ததும், அந்த வீடியோவை காட்டி இளம்பெண்ணை விஷால் மிரட்டி உள்ளான். தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று பயமுறுத்தி உள்ளான். இதனால் பயந்துபோன இளம்பெண் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி விஷால் சவுத்ரி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, அதே வீடியோவை தனது நண்பர்களுக்கும் அனுப்பிய விஷால் சவுத்ரி, நண்பர்களுடனும் இளம்பெண்ணை பலவந்த படுத்தி உள்ளான். அந்த வீடியோவை வைத்து மிரட்டி சுமார் 18 மாதங்களாக விஷால் சவுத்ரியும், அவரது நண்பர்களும் இளம்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே இளம்பெண்ணின் வீடியோ பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பரவியது. இதனை இளம்பெண்ணின் உறவினர் ஒருவரும் பார்த்துள்ளார். இதையடுத்து விவகாரம் பூதாகரமானது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும், விஷால் சவுத்ரியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பஞ்சாயத்து கூட்டம் நடத்தி பிரச்சினையை தீர்க்க விஷாலில் பெற்றோர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் இளம்பெண்ணின் உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், போலீசார் விஷால் சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டார்ச்சர் கொடுத்த மாமனார்..! அந்தரங்கத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகள்.. மாமியாரோடு அரங்கேற்றிய பிளான்..!