இலங்கையில் தேவாலயம் ஒன்றில் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஈஸ்டர் பண்டிகையன்று நடந்த குண்டுவெடிப்புக்கு முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கொழும்பு நகரில் இருந்து தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் இருக்கும் மனம்பித்தயா நகரில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் இன்று காலை திடீரென துப்பாக்கி ஏந்தி ஒருவர் தேவாலயத்தில் நுழைந்து சுடத்தொடங்கினார்.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே - பிரதமர் மோடி சந்திப்பு.. முதன்முறையாக ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!
இந்த துப்பாக்கிசூட்டில் தேவாலயத்தில் இருந்த ஜன்னல் கதவுகள் சேதமடைந்தனர், ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரைக் கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் “துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவருக்கும், அந்த தேவாலயத்தின் பாதிரியாருக்கும் தனிப்பட்ட ரீதியில் விரோதம் இருந்துள்ளது. இதைத் தீர்க்கவே இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது தெரியவந்தது” எனத் தெரிவித்தனர்.

2019ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்களை குறிவைத்து நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 45 வெளிநாட்டவர் உள்பட 279 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையொட்டி இலங்கை முழுவதும் உள்ள தேவாலயங்களில் துப்பாக்கி ஏந்திய போலீாஸர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், தாக்குதலில் பலியானவர்களுக்கு சிறப்பு அஞ்சலிக் கூட்டத்தை திங்கள்கிழமை நடத்த கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. மேலும், இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை, பலகேள்விகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து பதில் இல்லை என்று கத்தோலிக்க திருச்சபை ஆதங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வெடிகுண்டு சதியில் ஈடுபட்டவர்களுக்கும், ராணுவ புலனாய்வு பிரிவினருக்கும் இடையே தொடர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் குற்றச் செயல்களுக்கு காரணமானவர்களை இலங்கை அரசுகள் தண்டிக்க வில்லை மாறாக பாதுகாக்கின்றன என்று தேவாலயம் சார்பில் குற்றம்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. குழந்தையை தூக்கி கொஞ்சி குழந்தையாக மாறிய மோடி..!