மத்தியப்பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது பாட்டு சத்தத்தைக் குறைக்க சொன்னதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் காவல்நிலையத்துக்குட்பட்ட மன்கிசார் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கேவாட். இவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தீபு கேவாட். திபு தனது வீட்டில் ஹோலி கொண்டாடியுள்ளார். ஹோலி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சத்தமாக பாட்டு போட்டுள்ளார் திப்பு. இதனால் இடையூறு ஏற்பட்டதால் சங்கரின் குழந்தைகளால் படிக்க முடியவில்லை என தெரிகிறது.
இதையும் படிங்க: ஹார்ன் அடிச்சது குத்தமா? சாலையில் வித்தை காட்டிய டியோ இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட முதியவரை அடித்தே கொலை செய்த கொடூரம்..

இதையடுத்து சங்கர், தீபுவிடம் சென்று பாட்டு சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. வாய் தகராறு முற்றியதில் தீபுவும் அவரது உறவினர்கள் 5 பேரும் சேர்ந்து சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சங்கரின் தந்தை 64 வயதான முன்னா கேவாட் படுகாயமடைந்தார்.

பின்னர், தரையில் சரிந்து விழுந்த முன்னாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னா கேவாட் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பீன்ஸ் சென்றனர்.
இதைத் தொடர்ந்து தீபு மற்றும் அவரது உறவினர்கள் தலைறைவாகிய நிலையில், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தேடி வருகின்றனர்.

ஹோலி பண்டிகையின் போது பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் ஏற்பட்ட தகராறில் இப்படி ஒரு கொலை அரங்கேறி இருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க: களைக்கட்டியது ஹோலா மொஹல்லா பண்டிகை! வீர சாகசம் செய்த சீக்கியர்கள்..!