கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள உலகளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நூர்ஜகான். இவரின் மூத்த மகள் யாஸ்மின் என்பவருக்கும், முன்னர் வடக்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த அலி என்பவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அலி குடிப்பழக்கத்திறு அடிமையானதாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டையிட்டும் வந்துள்ளார். இதனால் குழந்தைகளின் கல்வி பாதித்ததோடு, தம்பதிக்கு இடையே மன கசப்பும் ஏற்பட்டுள்ளது. பொறுத்துப் பார்த்த யாஸ்மின், இதுகுறித்து தமது தாய் நூர்ஜகானிடம் தெரிவித்துள்ளார்.

நூர்ஜகானும் இதுகுறித்து அலியிடம் கேட்டுள்ளார். ஆனால் நூர்ஜகானின் பேச்சை அலி கேட்டதாக தெரியவில்லை. அதன் பிறகும் தினமும் குடித்துவிட்டு வந்து போதையில் அடிக்கடி பிரச்னை செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அலி குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏன் இவ்வாறு செய்கிறாய் என மாமியார் நூர்ஜகான் கண்டித்துள்ளார். இதனால் மாமியார் நூர்ஜகான், மருமகன் அலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப சண்டையாக மாறி உள்ளது. அப்போது நூர்ஜகான், அலியை திட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விஷ சாராயவழக்கு குற்றவாளிகள்... ஜாமின் மனுக்கள் தள்ளுபடி- உயர்நீதிமன்றம் ..

இதனால் ஆத்திரமடைந்த அலி, மீண்டும் சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது. மாமியரை பழி தீர்க்க வேண்டும் என நினைத்த அலி, நள்ளிரவில் போதையில் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். யாரும் பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்த அலி, நைசாக மாமியாரின் கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் பார்க்காத நிலையில் வீடு முழுவதும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. ஆனால் இரவு ஏற்பட்ட சண்டை காரணமாக கண்டிப்பாக அலி நள்ளிரவு வந்து பிரச்னை செய்வார் என உணர்ந்த மாமியார் நூர்ஜகான், முன்கூட்டியே தனது வீட்டில் தங்காமல் உறவினர் வீட்டில் சென்று தங்கி உள்ளார்.

இதனால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. தொடர்ந்து இது தொடர்பாக சங்கராபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து இந்த விபத்து சம்பவம் தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் ராயப்பன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாமியாரின் வீட்டிற்கு தீ வைத்து எரித்த அலி என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியில் இரு சக்கர வாகனத்தில் வரும் அலி மாமியார் வீட்டிற்கு தீ வைத்து எரித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது
இதையும் படிங்க: இன்ஸ்டா மூலம் கஞ்சா சேல்ஸ்! கோடு வேர்டு சொன்னால் தான் பொட்டலம்..! சிக்கிய வாலிபர்கள்..!