திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த பாரூக் அலி தாவூத் என்பவரின் மனைவி தன்னை அடித்து கணவர் துன்புறுத்திக் கொடுமைப்படுத்துவதாக முசிறியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
இதையடுத்து, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாரூக் அலி தாவூத் மீது மனைவியை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்துவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யத் தேடி வந்தனர்.

ஆனால் பாரூக் அலி தாவூத் போலீசாரிடம் சிக்காமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாக இருந்துள்ளார்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாத நிலை நீடித்தது.
இதையும் படிங்க: கடலூரில் வரதட்சணை கொடுமை.. கணவன் உள்பட மூவர் கைது..!
இதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடந்த 2022ஆம் ஆண்டு பாரூக் அலி தாவூத்தை தேடப்படும் தலைமறைவு நபராக அறிவித்தார். மேலும் அவர் மீது அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசியும் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ரியாத்தில் இருந்து இலங்கை வழியாகச் சென்னைக்கு வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்த பாருக் அலியை விமானநிலைய அதிகாரிகள் மடக்கிபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் பாரு களியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வனத்துறையினருக்கு போக்கு காட்டிய கரடி.. கூண்டுக்குள் சிக்கியது எப்படி?