கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது . மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானின் உரையுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி, நடிகை இஷா பதானியின் நடனம் என ஐபிஎல் மேட்ச் களைக்கட்டியது. இந்த முதல் போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களை ஏமாற்றினால்.. 2026ல் திமுக ஏமாறும்.. தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் பகிரங்க எச்சரிக்கை.!!

அதன்படி ஹைதராபாத் அணி களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். பின்னர், 4வது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி சதம் பதிவு செய்தார்.

இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 286 ரன்கள் எடுத்தது.பின்னர், 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடத் தொடங்கியது. இறுதியில் இலக்கை எட்டமுடியாமல் ராஜஸ்தான் அணி 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

அதே போல் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்க கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க: கெஞ்சி ஆட்சிக்கு வந்த திமுக.. அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற தயங்குவது ஏன்.? திமுக அரசை விஜய் கிழி.!