தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று நடைபெறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு விஜய் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு ஏற்பாட்டில் செய்வது வழக்கம். தற்போது முதலாம் ஆண்டை நிறைவு செய்துவிட்டு இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சென்னை ராயப்பேட்டை ஒஎம்சிஏ மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகம்சார்பில் இப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடுகளை காலையிலேயே கட்சியினுடைய தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் கட்சியினுடைய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்து வருகின்றனர். தவெக சார்பில் நடைபெறக்கூடிய முதல் இப்தார் என்பதால் அனைத்து ஐயிட்டங்களும் ஸ்பெஷலாக மட்டனில் செய்யப்பட்டுள்ளன.

3500 பேருக்கு மட்டன் பிரியாணி சுடச்சுட தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான 600 கிலோ அரிசி மற்றும் 900 கிலோ ஆட்டுக்கறி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மட்டன் நோன்பு கஞ்சி, சிக்கன் 65, கத்தரிக்காய் சட்னி, வெங்காய ரைத்தா, பிரட் அல்வா ஆகியவையும் தயாராகியுள்ளது. இப்தார் கிட் பாக்ஸ் வழக்கப்படவுள்ளது. அதில் பேரீச்சம்பழம், 2 வெங்காய சமோசா, ஒரு பாட்டில் குளிர்பானம், ஒரு வாட்டர் பாட்டில், மட்டன் நோன்பு கஞ்சி ஆகியவை பரிமாறப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளையும் பாஸ் கொடுத்து தவெக அழைத்துள்ளது.
இதையும் படிங்க: சினிமாவில் மோசமாக சித்தரித்த விஜய்..! சாபத்தை போக்கவா இப்தார் நோன்பு..? பின்னணி என்ன..?
இந்நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தவெக தலைவர் விஜய் இன்று ஒருநாள் முழுதும் நோன்பு இருந்து இஸ்லாமியர்களின் முறைப்படி தொழுகை செய்து இப்தார் விருந்தை எடுத்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் தவெக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவுப் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: இஃப்தார் நோன்பில் பங்கேற்கும் விஜய் அறிவிப்பு..! ஏன் ப்ரோ இப்படி.? அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்..!