முதல்நாளான நேற்று மட்டும் கங்கை, சரஸ்வதி, யமுனை நதிகளில் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்ப மேளா பிப்ரவரி 26ம் தேதிவரை நடக்கிறது. இந்த மகா கும்ப மேளாவில் பங்கேற்க நாள்தோறும் ஏராளமான துறவிகள், அகோரி பாபாக்கள், பெண் துறவிகள், சாதுக்கள், மடாதிபதிகள், நாக சாதுக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் வருவார்கள்.

இந்த பண்டிகை முடிவதற்குள் கும்பமேளாவில் 45 கோடி மக்கள் வந்து செல்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்து மக்களின் புனித பண்டிகையாக இந்த மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறது. இந்த மகா கும்ப மேளாவில் நதிகளில் புனித நீராடும்போது செய்த பாவங்கள் அனைத்தும் நீக்கப்படும் என இந்துக்கள் நம்புகிறார்கள்.
இந்த மகா கும்ப மேளாவில் நேற்று ஒரு குடிலின் கீழ் ஒரு நாக பாபா கையில் பைப்(புகைக்கும் பைப்) உடன் அமர்ந்திருந்தார். அந்த நாக பாபாவை சிஎன்என் நியூஸ்-18 சேனல் செய்தியாளர் நேர்காணல் செய்தார்.
மிகவும் இளம் வயது துறவியான அவரின் பெயர் அபெய் சிங் என்று தெரிவித்தார். மும்பை ஐஐடிகல்வி நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியல் படித்துவிட்டு, அது பிடிக்காமல் துறவியாகிவிட்டதாக அபெய் சிங் கூறியதைக் கேட்டதும் செய்தியாளர் சற்றுதிகைத்துவிட்டார்.

ஏனென்றால், மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் என்பது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கல்விநிறுவனம். இங்கு இடம் கிடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த கல்வி நிறுவனத்தில் மிகவும் கடினமான ஏரோஸ்பேஸ் பொறியியல் படித்து முடித்து, துறிவியாக உள்ளேன் என்று அபெய் சிங் கூறியதைக் கேட்டதும் செய்தியாளர் திகைத்துவிட்டார்.
துறவிஅபெய் சிங்கிடம் “ இந்த நிலைக்கு எப்படி வந்தீர்கள்” என செய்தியாளர் கேட்டார். அதற்கு துறவி அபெய் சிங், “ நான் ஹரியானாவைச் சேர்ந்தவன். மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் பொறியியல் படித்தேன். அது மட்டுமல்ல டிசைனிங் நுட்பத்தில் முதுகலைப் பட்டமும், புகைப்படத்துறையிலும் பணியாற்றினேன். மாணவர்களுக்கு இயற்பியல் வகுப்புகளை நடத்தினேன்.
தத்துவயியல் படிக்கத் தொடங்கினேன், அப்போது ஏராளமான விஷயங்களை அறிந்து கொண்டேந். குறிப்பாக நான் என்னைப் புரிந்து கொண்டேன், இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொண்டேன். அதன்பின் நான் படித்த அறிவியல், ஏரோஸ்பேஸ் அனைத்தையும் விட்டுவிட்டேன்.
இதையும் படிங்க: கும்பமேளாவும் அதன் பொருளாதார தாக்கமும்...

உண்மையான ஞானம் என்ன என்பதைபுரிந்து கொண்டேன், உங்கள் மனநிலை, புத்திஆகியவற்றை நீங்கள் அறியவிரும்பினால், ஆன்மீகத்தைத் தேர்ந்தெடுங்கள். இந்த நிலைதான் சிறப்பான நிலை. நீங்கள் தொடர்ந்து ஞானத்தை பெற்றுக்கொண்டே இருந்தால், இந்த நிலையை அடைந்துவிடலாம் நான் என்னை சிவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: ரூ.2 லட்சம் கோடி வருவாய்! மகா கும்ப மேளா மூலம் உ.பி. அரசுக்கு ‘ஜாக்பாட்’