12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்ப மேளா இந்த முறை உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, சரஸ்வதி, யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடக்கிறது. 45 நாட்கள் நடக்கும் இந்துக்களுக்கான இந்த பண்டிகையில் இன்று தொடங்கிய முதல்நாளே 50 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் வந்து புனித நீராடுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26ம் தேதிவரை நடக்கும் மகா கும்ப மேளா நிகழ்ச்சியில் 45 கோடி மக்கள் வந்து புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்கா மற்றும் ரஷ்யா மக்கள் தொகையைவிட அதிகமாகும்.
இந்த மகா கும்ப மேளா நிகழ்ச்சியால் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவுக்கு உயரக்கூடும் என்றும், 45 நாட்கள் நிகழ்ச்சிக்காக மாநில அரசு ரூ.7ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியிருக்கிறது.

பொருளாதார வல்லுநர்கள் கணிப்பின்படி, ஒருவேளை இந்த மகா கும்ப மேளாவுக்கு 40 கோடி மக்கள் வந்து, சராசரியாக ரூ.5 ஆயிரம் செலவு செய்தாலே ஏறக்குறைய ரூ.2 லட்சம் கோடி பொருளாதார சுழற்சியை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளனர். தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பான சிஐஏடி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இந்த மகா கும்ப மேளாவுக்கு வரும் ஒவ்வொரு நபரும் சராசரியாக ரூ.10 ஆயிரம் வரை செலவிடுவார்கள். இந்த அளவு செலவிட்டாலே பொருளாதாரத்தில் ரூ.4 லட்சம் கோடி சுழற்ச்சியை உருவாக்கும். இது சாராசி ஜிடிபியை ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக ஊக்கப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ கடந்த 2019ம் ஆண்டு பிரயாக்ராஜில் நடந்த ஆர்த்(பாதி) கும்ப மேளா மூலம் ரூ.1.20 லட்சம் கோடி மாநிலப் பொருளாதாரத்தில் வளர்ச்சியை அளித்தது. இந்த முறை முழு, மகா கும்ப மேளா பிரயாக்ராஜ்ஜில் நடக்கிறது, 40 கோடிக்கும் அதிகமான மக்கள் வருவார்கள். இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடியை உருவாக்கும். 50 லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை வந்து செல்லலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு(சிஏஐடி) கூறுகையில் “ பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பிஸ்கட், பழரசம், உணவு வகைகள் இவற்றின் வியாபாரமே 45 நாட்களில் ரூ.20ஆயிரம் கோடியைக் கடக்கும்.
இதையும் படிங்க: உ.பியில் மகா கும்பமேளா இன்று தொடங்கியது: லட்சக்கணக்கில் பக்தர்கள் புனித நீராடினர்...

விளக்குகள், கங்கை நதிநீர், சிலைகள், ஊதுபத்தி, ஆன்மீக புத்தகங்கள் உள்ளிட்ட ஆன்மீக பொருட்கள் மூலம் ரூ.20ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும்.
போக்குவரத்து, உள்நகரப் போக்குவரத்து, சரக்கு கொண்டுவருதல், செல்லுதல், வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள், ரிக்சாக்கள் மூலம். ரூ.10ஆயிரம் கோடி வர்த்தகமும், சுற்றுலா சேவை, சுற்றுலா வழிகாட்டிகள், அது தொடர்பான சேவைகள் மூலம் ரூ.10ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது தவிர மருத்துவ முகாம், ஆயுர்வேதப் பொருட்கள் மூலம் ரூ.3ஆயிரம் கோடி, இடிக்கெட், டிஜிட்டல் பேமெண்ட்ஸ், வை-பை சேவை, மொபைல் சார்ஜ் மையங்கள் மூலம் ரூ.1000 கோடி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பதாகைகள், அது தொடர்பான பணிகள் மூலம் ரூ.10ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ‘கும்பமேளாவை போர்க்களமாக மாற்றுவோம்’: காலிஸ்தான் தீவிரவாதி மத்திய அரசுக்கு எச்சரிக்கை