சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்
கோவில் கட்டப்பட்டதற்கான எவ்வித ஆதாரம் இன்றி காணும் மிக தொன்மைவாய்ந்ததும், சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும் போற்றப்படுவது திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம். பல்வேறு புராதன சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்
ஆலயத்தின் மூலவர் ஸ்ரீவன்மீகநாதர், பிரதான மூர்த்தியான ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீநவக்கிரக சன்னதி, ஸ்ரீரௌத்திர துர்க்கை, ஸ்ரீகமலாம்பாள் அம்மன் உள்ளிட்ட ஆலயத்தின் பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
தரிசனத்திற்கு பின்னர் ஆலய சிவாச்சாரியார்கள் ஆலயத்தின் சிறப்பு குறித்தும், ஒவ்வொரு சாமி சன்னதிகளின் ஐதீக வழிபாடு குறித்தும் இளையராஜாவிடம் விளக்கினர்.
இதையும் படிங்க: 11 நாட்கள் தீப ஜோதி நிறைவு..2668 அடி உயர மலையில் இருந்து இறங்கிய மகாதீப கொப்பரை!
இதையும் படிங்க: நாமக்கல்லில் 1,00,008 வடை மாலை அணிந்து...பக்தர்களுக்கு காட்சி தந்த ஆஞ்சனேயர்