''ரூ.15000 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுகின்றது. இவை முழுக்க முழுக்க மது ஆலைகளில் இருந்து கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் மதுவாக இருக்க வாய்ப்புள்ளது'' என அரசியல் விமர்சகரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், ''மணிக்கு மேல் மதியம் 12 மணிவரை குவாட்டருக்கு 100 ரூபாய் திமுக ரவுடிகள் நடத்தும் பார்களில் அதிகமாக வாங்கப்படுகின்றது.
இதையும் படிங்க: மத்திய அரசுடன் மோதல் உச்சம்..! புது ரூட் பிடித்த ஸ்டாலின்- உருவானது மாநில சுயாட்சி உயர்மட்டக்குழு
இந்த பணம் எல்லாம் யாருக்குச் செல்கின்றது? தற்போது மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் நடந்த ஊழல், 1,000 கோடி ரூபாயைத் தாண்டலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இது மிக குறைவான மதிப்பீடு. கடந்த ஆண்டு மட்டும் 45,000 கோடிகளுக்கு மேல் மதுவிற்பனை நடந்துள்ளது. அப்படிப் பார்த்தால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 120 கோடிகளுக்கு மேல் மதுவிற்பனை நடந்துள்ளது. 10 ரூபாய் அடக்கவிலைக்கு அதிகமாக விற்றிருந்தால் கூட 4500 கோடி ஊழல் நடந்திருக்கும். இன்னும் குறைந்து மதிப்பிட்டால் கூட 3,500 கோடிகளுக்கு மேல் இருக்கும்.

இது எல்லாம் சட்டப்படி விற்க ஒதுக்கப்பட்ட நேரத்தில் நடந்த ஊழல். ஆனால் இரவு 10 மணி முதல் மதியம் 12 மணிவரை மூன்றில் ஒரு பங்கு மதுவிற்பனை நடைபெறுகின்றது. அதாவது 15000 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுகின்றது. இவை முழுக்க முழுக்க மது ஆலைகளில் இருந்து கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் மதுவாக இருக்க வாய்ப்புள்ளது. நூற்றுக்கு 30 ரூபாய் கூடுதல் விலை என்றால் ஏறக்குறைய 4500 கோடிகள் ஊழல் நடைபெற்று இருக்கின்றது. நாம் சொல்லும் கணக்கு சட்டப்படி கொள்முதல் செய்யப்பட்ட மதுவுக்கு மட்டுமே பொருந்தும்.
இதில் சாராய ஆலை முதலாளிகள் அரசுக்கு கொடுக்கும் லஞ்சம் எல்லாம் சேர்த்தால் ஒரு இமாலய ஊழல் டாஸ்மாக்கில் மட்டுமே அரங்கேற்றப்பட்டுள்ளது. இது எல்லாம் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுக அரசுக்கும் தெரியாமல் நடக்கும் ஊழல் என்று மக்கள் நம்ப வேண்டும்.

சரி ஸ்டாலின் தலைமையில் இயங்கும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கின்றது? காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வது. பொருள் திருட்டுப் போனதாக புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவரிடமும் லஞ்சம் வாங்குவது, திருடனிடமும் லஞ்சம் வாங்குவது, கடைகளில் மாமூல் வசூல் செய்வது, கஞ்சா, குட்கா வியாபாரிகளோடு சேர்ந்து கல்லா கட்டுவது, காவல்நிலையத்தில் வேட்டி காணாமல் போனதாக புகார் கொடுக்க வந்தால் அவனின் அண்டர்வேயரையும் உருவிக்கொண்டு அம்மணமாக ஓட விடுவது, சாராயக்கடை வாசலில் நின்று கொண்டு குடிமகன்களிடம் வழிப்பறி செய்வது என தமிழக காவல்துறை செய்யும் சமூக சேவை கொஞ்ச நஞ்சமல்ல.
சுருக்கமாக சொன்னால் டாஸ்மாக் ஊழல், மணல் கொள்ளை என ஆயிரக்கணக்கான கோடிகள் திமுக அரசும், ஸ்டாலினின் குடும்பமும் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எக்கேடுகெட்டு நாசமாய் போனாலும் திமுகவுக்கு கவலை கிடையாது. டாஸ்மாக்கில் நடக்கும் அப்பட்டமான ஊழலை காவல்துறை கண்டு கொள்ளாமல் இருக்க காவல்துறை நடந்தும் மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை திமுகவும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.

திருடனுக்கு திருடன் நண்பன் என்ற அடிப்படையில் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கின்றது. இதில், இருந்தெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்ப சில சில்லறை சலுகைகளை செய்து மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றார்கள். ஒரு சீரழிந்துபோன மக்கள் விரோத ஆட்சியை திமுக மன்னர் குடும்பமும், அவர்களின் கீழ் வாழும் குறு நில மன்னர்களும் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் கூட தங்களது மக்கள் விரோத ஆட்சியை நிறுத்திக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. 2026-ல் மக்கள் நிச்சயம் திமுக அரசுக்கு புத்தி புகட்டுவார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குச்சி ஐஸு ச**ணுமா..? மேடையில் பச்சை பச்சையாகப் பேசிய திமுக பெண் நிர்வாகி..!