செம்மறி ஆடுகளை அடைத்து வைக்கும் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்ததால் நாற்றம் சகிக்காமல் தங்களை வேறு மண்டபத்திற்கு மாற்றும்படி பாஜகவினர் போலீஸருடன் வாக்குவாதம் செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனத்தை வைத்தார். சவுக்கடி போராட்டம் முலம் விவகாரத்தை பெரிதாக்கி லைம் லைட்டில் வைத்திருந்தார். இந்த விவகாரத்தில் அதிமுக, நாதக, பாமகவும் கையிலெடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக சார்பில் ஜன.3 மகளிர் பேரணி மதுரையிலிருந்து சென்னை நோக்கி வந்து ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்படும் என அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று குஷ்பு தலைமையில் மதுரையில் பாஜக மகளிர் அணியினர் கண்ணகி சிலை முன் மிளகாயை அரைத்து பூசி போராட்டத்தை தொடங்கினர். நடைபயணம் தொடங்கிய அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி சிம்மக்கல்லில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நான் அப்படி பேசல ..வீடியோ வெட்டி ஒட்டி பரப்புறாங்க..ஆண்ட பரம்பரை பேச்சுக்கு அமைச்சர் மூர்த்தி மறுப்பு ..!
இந்த மண்டபம் செம்மறியாடுகளை மந்தையாக அடைத்து வைக்கும் ஒரு மண்டபம் ஆகும். நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளை அடைத்து வைக்கப்பட்டுள்ள பட்டியும் மண்டபத்தின் உள்ளேயே இருந்ததால் ஆடுகளின் புழுக்கை, சிறுநீர் நாற்றம் காரணமாக பாஜகவின் மகளிர் அணியினர் முகம் சுளித்தனர். அவர்களை மேலும் தொல்லை கொடுக்க கூடுதலாக 200க்கும் மேற்பட்ட ஆடுகளை கூடுதலாக பட்டியில் அடைத்தனர்.

இதனால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் குஷ்பு உள்ளிட்ட மகளிர் அணியினர் அவதியடைந்தனர். போலீஸார் வேண்டுமென்றே இதுபோன்ற இடத்தில் அடைப்பதாக வாக்குவாதம் செய்தனர். வெளியில் இருந்த பாஜகவினரும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். இதுபற்றி பேசிய பாஜக நிர்வாகி ஒருவர் பாஜகவினர் போராட்டம் அறிவித்த நிலையில் அவர்களை கைது செய்ய முடிவு செய்த போலீஸார் வேண்டுமென்றே இந்த மண்டபத்தை தேர்ந்தெடுத்து அடைத்துள்ளனர்.
இதுபோன்ற சுகாதார குறைவான இடங்க்களில் குறிப்பாக மகளிரை அழைத்து வந்து பட்டியில் உள்ள ஆடுகளுடன் அடைப்பது என்னவகை நாகரிகம், அரசியல் கட்சியினரை கவுரவமாக நடத்தக்கூட போலீஸாருக்கு மனமில்லையா? இதை நாங்கள் டெல்லி மேலிடத்திற்கு புகாராக கொண்டுச் செல்வோம், இது போராட்டம் நடத்தும் அரசியல் கட்சினரை வேண்டுமென்றே அவமதிக்கும் செயல் என கொந்தளித்தனர். மதுரை காவல்துறையினரின் இத்தகைய போக்கு பாஜகவினரை ஆத்திரமடைய செய்துள்ளது. சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை விவகாரம்; அதிரடி காட்டும் அண்ணாமலை... மதுரை To சென்னை மகளிர் பேரணி