கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முரளிதரன். இவர் ஐக்கிய அமீரகத்தில் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு அந்நாட்டில் தன்னுடன் வேலை பார்த்த மொய்தீன் என்பவரை கொலை செய்து அல்-அயின் பாலைவனத்தில் புதைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் முரளிதரன் கைது செய்யப்பட்டார்.

கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்த முரளிதரன் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் உள்ள தனது தாயை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்பின்னர் முரளிதரன் முடிவு தலைகீழாக மாறியுள்ளது. இது குறித்து முரளிதரனின் தாய் பேசும்போது, அங்கு வேலை பார்க்கும் தனது மகன் வாரத்திற்கு இருமுறை செல்போனில் பேசினார் என்றும், 2009ம் ஆண்டு கொலை வழக்கில் கைதானதில் இருந்து அவரை ஒருமுறை கூட பார்க்கவில்லை என்றும், மேலும், இந்த கொலையை தன் மகன் தான் செய்தார் என்று ஒப்பு கொள்ளும்படி அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கியதாகாவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு...நெல்லையில் பரபரப்பு!!
இதனால் முரளிதரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. முரளிதரனை மன்னித்தால் அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதால் பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் முரளிதரனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதேபோல் கேரளாவை சேர்ந்த முகம்மது ரினாஷ் என்பவர் அரபு நாட்டில் வேலை செய்த மாற்றுத்திறனாளி ஒருவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஐக்கிய அமீரகத்தில் வேலை செய்த ஐதரபாத்தை சேர்ந்த பெண்ணுக்கும், ரினாஷ்க்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் கணவரை ரினாஷ் குத்தி கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் ரினாஷ்க்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு மரண தண்டனை விதித்தது. ரினாஷ் எவ்வளவு மன்னிப்பு கேட்டும் அவரின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஐக்கிய அமீரக அதிகாரிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்பு கொண்டு பேசிய போது முரளிதரனுக்கும், ரினாஷ்க்கும் மரண தண்டனை நிறைவேற்றுப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரினாஷின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு கடந்த 6ம் தேதி உள்ளூரில் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தாய், மகள் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை.. தப்பியோடிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்..!