இன்ஸ்டா பிரபலம் சிம்ரன் சிங் தனது அப்பார்மெண்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமாக இருந்து வரும் சிம்ரன் சிங் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பலோயர்களை கொண்டுள்ளார். கடைசியாக டிசம்பர் 13ஆம் தேதி இன்ஸ்டாவில் தனது ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதையடுத்து சிம்ரன் சிங் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .
25 வயதாகும் சிம்ரன் சிங், குருக்கிராமில் உள்ள தனது அப்பார்மெண்டில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சிம்ரன் சிங் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண் காவலரின் கணவர் தூக்கு ... மகன்சாவில் மர்மம்.. கதறும் தாய்
தனது கடைசி இன்ஸ்டா பதிவில் கடற்கரை பின்னணியில் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விடியோவை பகிர்ந்து, கடற்கரைக்கு மேல் முடிவில்லா சிரிப்பு மற்றும் அவளது கவுன் அணிந்த பெண் என கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். இப்பதிவை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .
இதையும் படிங்க: காரணம் சொல்லி சொல்லி ..சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை