பெற்றோரின் சண்டையால் நேர்ந்த கொடூரம்..! மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்தியப் பெண்..!
டிஸ்னிலேண்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று 11வயது மகனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இந்திய பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.
டிஸ்னிலேண்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று 11வயது மகனின் கழுத்தை அறுத்து இந்திய பெண் ஒருவர் கொலை செய்ததாக அமெரிக்க போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தியாவைப் பூர்வீமாகக் கொண்டவர் சரிதா ராமராஜு (வயது48) இவர்தான் தனது 11வயது மகனை சுற்றுலா அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த குற்றம் இவர் மீது நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 26 ஆண்டுகாலம் சிறை தண்டனை கிடைக்கும் என்று கலிபோர்னியா மாவட்ட தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
கலிஃபோர்னியாவில் கணவருடன் வசித்துவந்த சரிதா கருத்துவேறுபாட்டால் 2018ம் ஆண்டு விவாகரத்துப் பெற்றார். ஆனால்,11 வயது மகன் தந்தையுடனே வசித்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, மாதத்தில் 3 நாட்கள் மட்டும் தாய் சரிதாவுடன் மகன் தங்கலாம்.
இதையும் படிங்க: 6 வயது சிறுமி கொடூர கொலை.. மலையடிவாரத்தில் உடல்.. போலீஸ் வளையத்துக்குள் சிக்கிய சிறுவன்..!
இதன்படி இந்தமுறை தனது 11வயது மகனைப் பார்க்க சரிதா வந்திருந்தார், டிஸ்னிலேண்ட் செல்லவும் பாஸ் எடுத்துவந்திருந்தார். கடந்த 19ம் தேதி சரிதா, தனது மகனை டிஸ்னி லேண்ட் அழைத்துச் சென்றுவிட்டு, அன்று இரவு தந்தையிடம் மகனை ஒப்படைக்க வேண்டியிருந்தது. ஆனால், மறுநாள் காலை 9.12 மணிக்கு போலீஸாருக்கு சரிதா தொலைப்பேசியில் பேசினார். தனது 11வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாகவும், தானும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டதாகவும் போலீஸாரிடம் சரிதா தெரிவி்த்தார்.
இதையடுத்து, கலிபோர்னிலா ஆரஞ்சு கவுண்டியின் சான்டா அனா போலீஸார் விரைந்து வந்து ஹோட்டலில் பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் 11வயது சிறுவன் கிடந்தார். மகனை கொலைசெய்துவிட்டு பலமணிநேரம் கழித்துதான் போலீஸுக்கு சரிதா தகவல் தெரிவித்ததால் உயிருக்கு போராடினார்.
சரிதா தங்கியிருந்த ஹோட்டல் அறையில், பெரிய கத்தியை போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த கத்தியையும் முதல்நாள்தான் கடையில்சரிதா வாங்கியுள்ளார். சரிதாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த போலீஸார், அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் உயிர்பிழைத்தார்.
இது குறித்து ஆரஞ்சு மாகாண அரசு வழக்கறிஞர் டாட் ஸ்பிட்சர் கூறுகையில் “ ஒரு குழந்தையின் வாழ்க்கை என்பது தாய், தந்தை இருவருக்கும் இடையிலான கோபத்தில் தொங்கிக்கொண்டிருக்கக் கூடாது. அளவுக்கு அதிகமான கோபம் நீங்கள் விரும்பியவர் என்று கூட பார்க்காமல் உங்களை பொறுப்பற்றவராக்கி செயல்களை செய்ய வைத்துவிடும். ஒரு குழந்தையின் பாதுகாப்பான இடம் என்பது பெற்றோரின் கரங்கள்தான்.
ஆனால், அந்த தாயின் கரங்களே பெற்ற மகனின் கழுத்தை அறுத்துள்ளுத, கொடூரத்தின் உச்சக்கட்டம், இந்த உலகிற்கு மகனைக் கொண்டு வந்து அவரே உலகை விட்டு அனுப்பிவிட்டார். சரிதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 26ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். அந்த சிறுவனின் பெயர் யாதின் ராமராஜு” எனத் தெரிவித்தார்.
சரிதாவின் கணவர் பிரகாஷ் ராமராஜூ பெங்களூரைச் சேர்ந்தவர். சரிதா, ராமராஜூ இருவருக்கும் குழந்தையும் பெங்களூருவில் பிறந்துள்ளது அங்கேய சில காலம் வாழ்ந்தபின் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதில் நீதிமன்ற உத்தரவுப்படி மகனை பாதுகாக்கும் உரிமை தந்தை பிரகாஷீக்கும்,மாதத்தில் 3 நாட்கள் மட்டும் மகனை அழைத்துச் சென்று தாய் சரிதா கவனிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
இதனால் கணவரை விட்டு பிரிந்த சரிதா, விர்ஜீனியாவில் உள்ள பேர்பேக்ஸ் எனும் இடத்தில் தங்கியிருந்தார். ஆனால் சரிதாவின் கூற்றுப்படி, “அவரின் கணவர் பிரகாஷ் ராமராஜூ போதைப்பொருள் பயன்படுத்துவார், மது, போதை மற்றும் புகையில் உட்கொண்டு ஆக்ரோஷமாக நடப்பார். தாயிடம் பேசினால் மகனை அடிப்பார் என்பதால் என் மகன் என்னிடம் பேசவே தயங்கினான்” எனத் தெரிவித்தார். ஆனால், சரிதாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தந்தை பிரகாஷ் ராமராஜீ மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டாம்பூச்சியால் பறிபோன உயிர்.. பிரேசிலை உலுக்கும் 14 வயது சிறுவனின் மரணம்..!