×
 

ரஷ்ய அதிபர் புதினை கொல்ல மீண்டும் முயற்சி..? மாஸ்கோவில் கார் மீது வெடிகுண்டு வீச்சு..!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் செல்லும் ரூ.3 கோடி மதிப்புள்ள கார் திடீரென வெடித்து, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் செல்லும் ரூ.3 கோடி மதிப்புள்ள ஆரஸ் லிமோஷைன் கார் திடீரென மாஸ்கோ நகர சாலையில் வெடித்து, தீப்பிடித்து எரிந்ததால், அவரைக் கொல்ல மீண்டும் முயற்சி நடந்ததா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

மாஸ்கோ நகரில் உள்ள எப்எஸ்பி சீக்ரெட் சர்வீஸ் தலைமை அலுவலகத்தின் முன் இந்த லிமோஷேன் கார் வந்தபோது வெடித்து, தீப்பிடித்தது. இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் வரும் வீடியோவில் லிமோஷைன் கார் வெடித்து, தீப்பிடித்து எரியும் காட்சிகளும், அந்த தீ காரின் எஞ்சின் பகுதிவரை பற்றி எரிவதும் தெரிகிறது.

இந்த லிமோஷேன் சொகுசு கார், ரஷ்ய அரசின் அதிபர் சொத்துக்கள் பராமரிக்கும் துறைக்கு சொந்தமானதாகும். ஆனால், மாஸ்கோவின் ஸ்ரீடென்கா சாலையில் லிமோஷைன் கார் தீப்பற்றி எரிந்தபோது காரில் எத்தனைபேர் இருந்தார்கள், யார் இருந்தார்கள் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இதுவரை யாரும் காயம் அடைந்தார்கள், உயிரிழந்தார்கள் என்ற தகவலும் இல்லை என டெய்லி எக்ஸ்பிரஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 'இப்போ எங்க டைம்...' இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்.. இறுகப்பற்றும் நட்பு..!

ஆனால் சமூக ஊடகங்களில் சிலர் வெளியிட்ட தகவலில், இந்த லிமோஷைன் கார் ரஷிய அதிபர் புதினுக்கு பின்னால் வரும் பாதுகாப்பு வாகனம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

72 வயதான ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு இந்த காரை வடகொரிய அதிபர் கிம் ஜான் அன் பரிசாக வழங்கினார். இந்த சம்பவம் ரஷ்ய அதிபர் புதினை மீண்டும் கொலை செய்யும் முயற்சியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு கொடத்தில் ரஷ்யா விடுத்த எச்சரிக்கையில் “அதிபர் புதினின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தாலோ அல்லது கொல்ல முயற்சி நடந்தாலோ ரஷ்யா அணு ஆயுதங்கள் கொண்டு பதில் அளிக்க நேரிடும். இதுபோன்ற செயல்கள் உலகின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் யாசெஸ்லாவ் வோலோடின எச்சரித்துள்ளார்.

உக்ரைன் ராணுவ உளவுத்துறை தலைவர் கைரலாவ் புதானாவ் கூறுகையில் ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல பல முயற்சிகள் நடந்துள்ளன. எனத் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: உக்ரைன் போர் நிறுத்தம்: 12 மணி நேரம் நீடித்த அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ரஷ்யாவின் முடிவு இதுதான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share