உக்ரைன் போர் நிறுத்தம்: 12 மணி நேரம் நீடித்த அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ரஷ்யாவின் முடிவு இதுதான்..!
முக்கியமான விஷயம் என்னவென்றால், பேச்சுவார்த்தையை கடைபிடிப்பதும், ஒருவருக்கொருவர் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதும் ஆகும். இந்த விஷயத்தில், நாங்கள் வெற்றி பெறுகிறோம்
உக்ரைன் போர், கருங்கடல் தகராறை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க- ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நிறைவடைந்துள்ளன. 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில், இரு தரப்பினரும் போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சந்திப்பு தொடர்பான கூட்டு அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியாகும்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒரு சிறிய காணொளியை வெளியிட்டது. அதில் நாட்டின் பேச்சுவார்த்தைக் குழு பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியே வருவது காட்டப்பட்டது. "ரஷ்ய-அமெரிக்க சந்திப்பு முடிந்துவிட்டது" என்று ரஷ்ய அமைச்சகம் மேலும் விவரங்களைத் தெரிவிக்காமல் கூறியுள்ளது.
இதையும் படிங்க: பட்டைய கிளப்பும் கோலி சோடா..! அமெரிக்க, வளைகுடா சந்தையில் இந்திய சோடாவுக்கு கடும் கிராக்கி..!
‼️JUST IN:
— Spetsnaℤ 007 🇷🇺 (@Alex_Oloyede2) March 24, 2025
🇺🇸🇷🇺 The US-Russia talks in Riyadh has come to an end after more than 12hrs of discussions on different topics.
The topic of new Russian borders were discussed. A joint statement will be released later today (Tues).
Note: Talks between US-Ukraine on Sunday was 1hr. pic.twitter.com/3daQctnFSa
ரஷ்ய தூதுக்குழு உறுப்பினரும் சீனியர் ராஜதந்திரியுமான கிரிகோரி கரசின், ரியாத் பேச்சுவார்த்தைகளை 'ஆக்கபூர்வமானது' மட்டுமல்ல, 'தொழில்நுட்பமானது' என்றும் விளக்கினார். "ஒவ்வொரு சந்திப்பும் ஒரு உயர்மட்ட ஆவணம், ஒப்பந்தத்தில் முடிவதில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால், பேச்சுவார்த்தையை கடைபிடிப்பதும், ஒருவருக்கொருவர் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதும் ஆகும். இந்த விஷயத்தில், நாங்கள் வெற்றி பெறுகிறோம்" என்று பேச்சுவார்த்தையின் இடைவேளையின் போது கராசின் தெரிவித்தார்.
அமெரிக்க -ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு, குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, கருங்கடல் முயற்சியை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளைச் சுற்றி அமைந்தது. 'தானிய ஒப்பந்தம்' என்று பிரபலமாக அறியப்படும் இந்த ஒப்பந்தம், முதலில் ஐக்கிய நாடுகள் சபை, துருக்கியால் தரகு செய்யப்பட்டது.
மேற்கத்திய நாடுகள் ஒப்பந்தத்தின் தனது பகுதியை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி, ஜூலை 2023-ல் ரஷ்யா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. "ஒப்பந்தத்தின்படி, உங்களுக்கு நினைவு இருக்கும். எங்கள் தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்க உரிமைகள் கோரப்பட்டன.
அவை ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. இது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே உள்ளது" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் விவாதங்களுக்கு முன்னதாக கூறினார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ளதாகவும் பெஸ்கோவ் கூறினார்.
இதையும் படிங்க: பெற்றோரின் சண்டையால் நேர்ந்த கொடூரம்..! மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்தியப் பெண்..!