மான்ஸ்டர் போல் முகம் முழுவதும் முடி... அலறியடித்து ஓடிய மாணவர்கள்..!!
இளைஞர் ஒருவருக்கு முகம் முழுவதும் முடி வளர்ந்து வளர்ந்து அவரை பாடாய் படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் நந்த்லேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் லலித் பதிடர். லலித்தின் முகத்தில் முடிய வளர்ந்துள்ளது. லலித்தின் 6வது வயதில் கண்டறியப்பட்ட இந்த அரியவகை நோய்க்கு ஹைபர்ட்ரிகோசிஸ் என அழைக்கப்படுகிறது. நாளாக நாளாக லலித்தின் முகத்தில் அதிகமாக முடி வளர ஆரம்பித்துள்ளது. அதாவது 100 கோடியில் ஒருவருக்குத்தான் இத்தகைய விசித்திர நோய் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லலித்க்கு முகத்தில் முடி வளர்ந்ததை பார்த்த பள்ளியின் சக மாணவர்கள் பயந்துள்ளனர். லலித் தன் குறையை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாஜ பேசி பழகியுள்ளார். தன் மீதான விமர்சனங்களை கண்டுக் கொள்ளாமல் யூடியூப் சேனல் ஒன்றும் தொடங்கியுள்ளார். அதில் தன் வாழ்நாளில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: இப்படியும் ஒருத்தரா... வாழ்நாள் முழுவதும் ரத்தத்தையே கொடுத்த மாமனிதன்!!
மனதளவில் தைரியமாக இருக்கும் லலித்துக்கு இத்தாலியிலுள்ள மிலன் நகரில் இருந்து கின்னஸ் சாதனை புத்தக அமைப்பாளர்களிடத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்ற லலித்தின் முகத்தில் 95 சதவிகிதம் முடி வளர்ந்துள்ளது. லலித்தின் முகத்தில் இருந்து ஒரு சதுர செ.மீக்கு 201.72 முடிகள் உள்ளன. இது கின்னஸ் சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தங்க சுரங்கமே புதையலாக கிடைத்த அதிசயம்...எங்கே தெரியுமா?