×
 

இந்திய பெண்ணுக்கு தூக்கு; ஐக்கிய அமீரக அரசு அதிரடி நடவடிக்கை... கடைசி ஆசை - உருக்கமான காட்சி..!

கொலை வழக்கில் இந்திய பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதித்து ஐக்கிய அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் கேயேரா முக்தி கிராமத்தில் இருந்த சிறிய ஒரு வீட்டில் திடீரென செல்போன் ஒலிக்கிறது. அப்போது அவர்களுக்கு தெரியாது, நெஞ்சை பதற வைக்கும் ஒரு செய்தி அதுவென ...

அன்று பிப்ரவரி 14-ஆம் தேதி. போனில் வந்த எண் புதிது ஆனாலும் அழைத்த குரல் மிகவும் பழக்கமான குரல் தான். ஆனால் அந்த குரலில் ஆழ்ந்த துக்கம் புதைந்து இருந்ததால் முதலில் பேசுவது யார் என்றே உடனடியாக இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அடுத்த வார்த்தை வந்தபோது 33 வயதான தங்கள் மகள் ஷார்ஜாதிதானின் குரல்தான் அது என்பது அவர்களுக்கு புரிந்தது. ஆரம்பத்திலேயே "இது என்னுடைய கடைசி அழைப்பு" என்று தான் அவர் பேசத் தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே தங்கள் பெண்ணுக்கு நிலைமை என்ன ஆகுமோ என்று துக்கத்தில் இருந்த அந்த குடும்பத்தினருக்கு மகளின் இந்த வார்த்தை தீயாக சுட்டது.

போனில் பேசிய ஷாஜாதியின் சகோதரர் ஷாம் ஷெர்,  "எப்படி இருக்கிறாய்.. என்ற வழக்கமான வார்த்தைகளை கூட கேட்க முடியாமல் தொண்டை விக்கித்து போனது அவருக்கு. தொடர்ந்து ஷா ஜாதியே பேசினார். தூக்கிலிடுவதற்கு முன்பு 'உனது கடைசி விருப்பம்' என்னவென்று கேட்டார்கள்.. நான் எனது அம்மா அப்பாவுடன் பேச வேண்டும் என்று சொன்னேன். அதனால்தான் எனக்கு போன் போட்டு கொடுத்திருக்கிறார்கள்.. என்று சொன்னபோது ஒட்டுமொத்த குடும்பமே கதறி அழுதது. அவ்வளவுதான் .. முடிந்து போனது எல்லாம்.. அதன் பிறகு அழைப்பு மட்டுமல்ல மகளுடன் சகோதரர்களுடன் இருந்த அனைத்துமே துண்டிக்கப்பட்டு விட்டது. 

மகளுடன் பேசிய மறுநாள் தான் அவருக்குமரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.. இனி இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பார்க்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வந்த இந்தப் பெண்ணுக்கு தான் 4 வயது குழந்தையை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை  நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

தன்னை மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாக நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணின் தரப்பில் வாதங்களை முன்வைத்தும், அது நிராகரிக்கப்பட்டு அதிரடியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

33 வயதான அந்த அவலை பெண் ஷா ஜாதி கான் உத்தரபிரதேச மாநிலம் பண்டா  மாவட்ட கிராமத்து சேர்ந்தவர். இந்தியாவிலிருந்து ஏராளமான பெண்கள் வெளிநாடுகளில் வேலை செய்வது போல் இவரும் ஐக்கிய அரபு அமீரக நாடான அபுதாபியில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.

அவருடைய பராமரிப்பில் இருந்த நாலு மாத குழந்தையை கொன்று விட்டதாக அவர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த குழந்தை எதிர்பாராமல் இறந்து விட்டது. அதற்கு இந்த பெண் தான் காரணம் என அவர் வேலை பார்த்து வந்த குடும்பத்தினர் குற்றம் சாட்டினார்கள். அது பற்றி அந்தப் பெண்ணிடமே வீடியோ பதிவு செய்து, வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் மனைவி தப்பி ஓட்டம்...தடுத்த கணவனுக்கு அடி, உதை!!

அந்தப் பெண்ணை மிரட்டி அடித்து உதைத்து சித்திரவதை செய்து தான் அந்த வீடியோவை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அத்துடன் குழந்தையின் பெற்றோர் கூட குழந்தையின் பிரேத பரிசோதனையை நடத்த விரும்பவில்லை. மரணம் குறித்த விசாரணைக்கும் மறுத்துவிட்டனர். அதன் பின் ஷாஜாதி தான் தங்கள் குழந்தை சாவுக்கு காரணம் என கூறி வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் பெண்ணின் தந்தை கடந்த ஆண்டு மே மாதம் கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அந்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில்தான் இப்போது அந்த பெண் தூக்கிலிடப்பட்டு இருக்கிறார். 

இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் வரை அவர் தூக்கிலிடப்பட்ட தகவலே யாருக்கும் தெரியாது. தனது மகளின் நிலை குறித்து எந்த விவரமும் தெரியாத நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவருடைய தந்தை வழக்கு தொடர்ந்த பிறகு தான் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. 

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஐக்கிய அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அந்தப் பெண்ணை தூக்கிடப்பட்ட தகவல் அதிகாரப்பூர்வமாக கிடைத்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாளை இறுதிச்சடங்கு!

மத்திய அரசின் கூடுதல் தலைமை வக்கீல் சேதன் சர்மா உயர்நீதிமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். மார்ச் 5ஆம் தேதி அதாவது நாளை அந்தப் பெண்ணின் உடல் தகனம் செய்யப்படும் என்று தகவல் வந்திருப்பதாகவும் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கி வருவதாகவும் அப்போது சேதன் சர்மா குறிப்பிட்டார். 

அதைத்தொடர்ந்து இந்த பெண்ணுக்கு நடந்திருப்பது துரதிஷ்டவசமானது என்று கூறி உயர் நீதிமன்றம் பெண்ணின் தந்தை ஷபீர் கான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

தந்தை கண்ணீர்!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனது மகள் தூக்கிடப்பட்ட தகவலை அறிந்ததும் தந்தை சபீர் கான் "இது அநீதி" என்று கூறி, கண்ணீர் மல்க கதறி அழுதார். "என் மகளை உயிருடன் தான் பார்க்க முடியவில்லை. அவருடைய உடலையாவது தாய் மண்ணிற்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும்" என்றும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவருடைய வழக்குரைஞர், ஷார்ஜாதி கானின் மரண தண்டனையை "சட்டத்திற்கு புறம்பான கொலை" என்று கூறியிருக்கிறார். 

" நீதித்துறையானது, கொலை என்ற போர்வையில் நீதிக்கு புறம்பான கொலை செய்திருக்கிறது" என்றும் அவர் விமர்சித்தார்.

இதையும் படிங்க: 75 ஆயிரம் போலீசாருக்கு 10 ஆயிரம் போனஸ்; ஒரு வாரம் விடுப்பு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்...!  

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share