உங்க அப்பா என்ன பூட்டு வியாபாரியா? - ஸ்டாலினை வம்பிழுக்கும் ஆர்.பி.உதயகுமார்!
அதிமுக கொண்டு வந்த எல்லா திட்டத்திற்கும் பூட்டு போடுகிறாரே, ஒருவேளை கருணாநிதி போன ஜென்மத்தில் பூட்டு வியாபாரியாக இருந்திருப்பார் போல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
அதிமுக கொண்டு வந்த எல்லா திட்டத்திற்கும் பூட்டு போடுகிறாரே, ஒருவேளை கருணாநிதி போன ஜென்மத்தில் பூட்டு வியாபாரியாக இருந்திருப்பார் போல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில், பஎம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சியினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். முன்னதாக காங்கேயம், நத்தம் அரசு பள்ளியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தளத்தினை திறந்து வைத்து , மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
வசமாக சிக்கிய திமுக:
இந்நிகழ்ச்சியில் பேசிய, ஆர்.பி. உதயகுமார், “505 வாக்குறுதிகளை கொடுத்தீர்களே என்ன ஆயிற்று எனக் கேட்டால், 90% நாங்கள் வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார். ஆனால் நேற்று சிவகங்கையில் என்ன சொல்கிறார், நாங்கள் வாக்குறுதி கொடுத்தது உண்மை , ஆனால் 380 வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம், 33 க்கும் மேலே துறைகள் உள்ளது. ஆகவே இன்னும் நிறைவேற்ற இருக்கிறது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்.
இதையும் படிங்க: ஓ.பி.எஸும் வேணாம்… இ.பி.எஸும் வேணாம்… திமுகவுக்கு ஜம்பாகிய செந்தில் முருகன்..!
நீங்கள் எல்லாம் நிறைவேற்றி விட்டீர்களா என கேட்கிறார், ஆட்சி அதிகாரத்தில் இருப்பது நீங்கள், நாங்கள் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து இருந்தால் எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக கொடுத்த வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றியிருப்பர் என்றார்.
பூட்டு வியாபாரியா?
எல்லா திட்டத்திற்கும் வந்தவுடன் போட்டார் பூட்டு, ஒருவேளை கருணாநிதி போன ஜென்மத்தில் பூட்டு வியாபாரி ஆக இருந்திருப்பார் போல என்றார். இருசக்கர வாகனத்திற்கு பூட்டு , 2000 அம்மா கிளினிக் பூட்டு, மடிக்கணினிக்கு பூட்டு , கரவை மாடு, ஆடுகளுக்கு பூட்டு, எல்லாத்துக்கும் பூட்டு போட்டா உங்க அப்பா என்ன பூட்டு வியாபாரியா? என கேள்வி எழுப்பினார்.
எல்லாத்திற்கும் பூட்டு போட்டுவிட்டு உங்க வீட்டை மட்டும் திறந்து வைத்துள்ளீர்களே என தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது மின்சார கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார். ஆனால் ஸ்டாலின் மூன்று முறை தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டார். சொத்து வரியை அதிமுக உயர்த்தவில்லை, ஆனால் இப்போது ஆண்டுக்கு ஆறு சதவீதம் உயர்த்துவோம் எனக்கூறிவிட்டு, 150 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள் திமுகவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சரமாரியாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவா.? ஓபிஎஸ்ஸின் ரகசியம் என்ன?